வானில் வட்டமடிக்கும் விமானம்..! பல விமான சேவைகள் ரத்து..!
தென் மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (நவ.30ஆம் தேதி) பிற்பகல் 2.30 மணியளவில் ஃபெஞ்சல் புயலாக உருவெடுத்தது. இந்த புயல் ஆனது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இன்று (நவ.30) பிற்பகலில் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்த ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும், தமிழக கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது
புயல் கரையைக் கடக்கும் போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைத் கண்டிப்பாக தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக கடற்கரை. பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொள்கிறது.
இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக குவைத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானம் தரையிறங்க முடியாத சூழல் காரணமாக வானில் வட்டமடித்து கொண்டிருக்கிறது. ஃபெஞ்சல் புயல் இன்று கரையையே கடக்கும் நிலையில் மோசமான வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக 6 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.
விமானம் வேறு விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுமா, இல்லை சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் சூழல் உருவாகுமா என்று பின்னர் அறிவிக்கப்படும். இதே நிலை நீடித்தால் திருச்சி, கோவை, பெங்களூர் போன்ற விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும் என விமான நிலைய நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. சென்னையில் தற்போது சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வரும் நிலையில் மஸ்கட், குவைத், மும்பை உட்பட 5 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருகின்றன.
Read More: அதிர்ச்சி!. 200 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து!. 27 பேர் பலி!. 100 பேரை காணவில்லை!