For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’அதிமுக நிச்சயம் அழியும்’..!! ’2025இல் பெரிய சம்பவம் இருக்கு’..!! ஓபிஎஸ் ஆதரவாளர் பரபரப்பு பேட்டி..!!

OPS supporter Vaithilingam opined that Edappadi Palaniswami is needed by AIADMK
07:38 AM Sep 10, 2024 IST | Chella
’அதிமுக நிச்சயம் அழியும்’     ’2025இல் பெரிய சம்பவம் இருக்கு’     ஓபிஎஸ் ஆதரவாளர் பரபரப்பு பேட்டி
Advertisement

தஞ்சையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுக ஒன்றிய வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது. இதனை நிறைவேற்ற தான் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதிமுகவில் மீண்டும் சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைய வேண்டும்.

Advertisement

எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவுக்கு தேவைதான். அதே சமயத்தில் 2026ஆம் ஆண்டு தேர்தலுடன் அதிமுக அழிந்து விடும் என்று தினகரன் கூறியது உண்மைதான். எடப்பாடி பழனிசாமி தலைமையால் நிச்சயம் அதிமுக அழிந்துவிடும். அவருடைய தலைமையால் அதிமுகவின் வாக்குவங்கி 20% வரை குறைந்துள்ளது. அதிமுக மீண்டும் சேரக்கூடாது என்று நினைப்பவர்கள் விரைவில் கட்சியை விட்டு வெளியேறுவார்கள். அதிமுகவில் அனைவரும் இணைய வேண்டும் என்று எல்லோரும் விரும்பும் நிலையில், 2025ஆம் ஆண்டு இதற்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

மேலும், கட்சியில் இருக்கும்போதே தேமுதிக மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை கூட்டணியில் சேர்க்கலாம் என்று எடப்பாடி பழனிசாமியிடம் கூறினோம். ஆனால் அவர்தான் அதிமுக தனித்து போட்டியிட்டால், வெற்றி பெறும் எனக்கூறி எல்லோரையும் ஏமாற்றிவிட்டார்” என்று தெரிவித்தார்.

Read More : இந்த ராசிக்காரர்கள் உஷாரா இருங்க..!! எல்லா பிரச்சனையும் வரப்போகுது..!!

Tags :
Advertisement