முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆசையை அடக்க முடியாமல் மருமகள் மீது பாய்ந்த அதிமுக நிர்வாகி..!! குடும்பமே சேர்ந்து கட்டாய கருக்கலைப்பு..!! அதிரவைக்கும் பின்னணி..!!

03:10 PM Oct 25, 2024 IST | Chella
Advertisement

தூத்துக்குடியின் ஸ்டேட் பேங்க் காலனிப் பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவர், அதிமுகவின் முன்னாள் கவுன்சிலரும், அந்த வட பகுதியின் பகுதி செயலாளராகவும் இருக்கிறார். இந்நிலையில், பொன்ராஜின் மகன் கவிராமுக்கும், மணிராஜ் என்பவரின் மகள் திவ்யதர்ஷினிக்கும் கடந்த 10.12.2023 அன்று திருமணம் நடைபெற்றது. பொன்ராஜின் மகன் ஹோட்டல் வைத்திருக்கிறார். திவ்யதர்ஷினி ஆசிரியை பயிற்சி முடித்து விட்டு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

Advertisement

திருமணத்தின் போது, என்னோட இரண்டு மகள்களையும் 100 பவுன் நகை போட்டு சிறப்பாக் கல்யாணம் முடுச்சு வைத்தேன். அதே மாதிரி என் வீட்டுக்கு வருகிற மருமகளும் அந்தளவுக்கு நகை, ரொக்கத்தோடு வரணும்னு சொல்லியுள்ளார் அதிமுக நிர்வாகி பொன்ராஜ். இதையடுத்து, திவ்யதர்ஷினி குடும்பத்தினர் வரதட்சணையாக 80 பவுன் நகை, மாப்பிள்ளைக்கு 3 பவுன் செயின், ரூ.10 லட்சம் ரொக்கம், ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொடுத்துள்ளனர். மேலும், சாப்பாட்டுச் செலவு ரூ.7 லட்சம் என மொத்தத்தையும் அள்ளிக் கொடுத்திருக்கிறார் திவ்யதர்ஷினியின் தந்தை மணிராஜ்.

இந்நிலையில் தான், 10.01.2024 அன்று மாலை திவ்யதர்ஷினியின் கணவர் கவிராமும், அவரது தாய் லீலாவதியும் வெளியே சென்றிருந்த நேரத்தில் இரவு 10.30 மணிக்கு திவ்யதர்ஷினி தனது அறையில் தூங்கியிருக்கிறார். அப்போது, வீட்டிலிருந்த மாமனார் பொன்ராஜ், மருமகளின் அறைக்குள் நுழைந்து அவரை பார்த்து ரசித்ததோடு திவ்யதர்ஷினியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அப்போது விழித்த திவ்யதர்ஷினி, “என்ன இது. மகளை போல பார்க்க வேண்டிய மாமனார் இப்படியா நடந்துகொள்வது” என திட்டிக் கொண்டிருக்கும் போதே மாமனார் பொன்ராஜ், இணங்கி போகும்படி சொன்னதும் கொதிப்பில் திவ்யதர்ஷினி அவரைக் கடுமையாக திட்டி வெளியே அனுப்பியுள்ளார்.

மறு நாள் விடிந்ததும் தன் கணவரிடமும், மாமியார் லீலாவதியிடமும் சொல்லிக் திவ்ய தர்ஷினி கதறியிருக்கிறார். அவருக்கு அறுதல் சொல்ல வேண்டிய அவர்ளோ, சப்பைக் கட்டுக் கட்டியிருக்கிறார்கள். “இது இங்கெல்லாம் இப்படித்தான். ஒத்துப் போவணும் இல்லன்னா உண்டு இல்லன்னு பண்ணிறுவோம்னு” கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து, அங்கே திவ்யதர்ஷினிக்கு தொடர் டார்ச்சர்கள், அடி உதை சித்ரவதைகள் நடந்துள்ளது.

இந்த நிலையில் திவ்யதர்ஷினியின் தாய்க்குச் சொந்தமான 25 சென்ட் நிலத்தை எழுதி வாங்கி வரச் சொல்லி கணவனும், வீட்டாரும் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்துள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் இந்தச் சித்ரவதைகளைத் தாங்க முடியாத திவ்யதர்ஷினி, தனக்கு நடந்தவற்றையும், மாமனாரின் மோசமான நடவடிக்கை, நிலம் பற்றி தன் தந்தையிடம் போனில் பேசி கண்ணீர் வடித்திருக்கிறார். மகளின் நிலை கண்டு பதறிப்போன மணிராஜ், தன் உறவினர்களோடு சென்று பொன்ராஜிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்.

“அன்றைக்கு தெரியாம குடி போதையில அப்படி நடந்துக்கிட்டேன். மன்னிச்சுடுங்க…” என்று அவர்களிடம் பொன்ராஜ் கை கூப்பிக் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, மணிராஜ் உறவினரோடு திரும்பியிருக்கிறார். பின்னர், இரண்டு மாதங்களில் திவ்ய தர்ஷினி கர்ப்பமாக கணவர் அவரை, அவரது பெற்றோர் வீட்டில் கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளனர். மகளின் கர்ப்பம் கருதி அவரை மருத்துவர் சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர் சிகிச்சை முறைகளை நல்லபடியாகவே கவனித்துக் கொண்டனர். பின்னர் திவ்யதர்ஷினியைக் கணவர் வீட்டில் கொண்டுச் சென்று விட்டுள்ளனர்.

தங்களுக்கு இணங்கிச் செல்லாத மருமகளின் மீது ஆத்திரப்பட்ட கணவர் மற்றும் குடும்பத்தினர் திவ்யதர்ஷினியின் கருவைக் கலைக்க முடிவு செய்து, சென்னையில் சித்த மருத்துவராக இருக்கும் கணவரின் சகோதரியான கீதாவை வர வழைத்துள்ளனர். பின்னர், அவருக்கு வலுக்கட்டாயமாக அதிகளவு இஞ்சி மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை வாயில் ஊற்றியுள்ளனர். இந்த குடைச்சலில் மறுநாளே திவ்யதர்ஷினிக்கு அபார்ஷன் ஆகிவிட்டதாம்.

தொடர்ந்து கணவர் உள்ளிட்ட பொன்ராஜூம் குடும்பத்தார்களும் சேர்ந்து, இங்கே நடந்ததை வெளிய சென்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். அந்த மிரட்டல் எச்சரிக்கையோடு திவ்ய தர்ஷினியை 01.10.2024 அன்று அவரது பெற்றோர் வீட்டில் கொண்டு விட்டுள்ளனர். கணவர் கவிராம் வந்து தன்னை கூட்டிப் போகாத நிலையில், வீட்டிற்குச் சென்ற அவரை உள்ளே விடாமல் அடித்துத் துன்புறுத்தி அனுப்பியுள்ளனர். இந்நிலையில், திவ்யதர்ஷினி மெண்டல் அதை மறைச்சி எனக்கு கட்டி வைச்சுட்டாக என்று கணவர் கவிராம் தன் மாமனார் மணிராஜின் மீது வழக்குப் போட்டுள்ளாராம்.

இதை இப்படியே விட்டு விடக் கூடாது என்ற முடிவுக்கு வந்த திவ்யதர்ஷி, தன் தந்தையோடு சென்று தனக்கு மாமனார் வீட்டில் நடந்து கொடுமைகளுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடியின் வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதையடுத்து, அங்கே தன் அரசியல் செல்வாக்கபை் பயன்படுத்திய பொன்ராஜ், புகார் மனுவை நீர்த்துப் போகச் செய்ய, கவனிக்கப்பட்ட எஸ்.ஐ. சிவகுமாரும் திவ்ய தர்ஷினியின் மனுவை ஒரு ஓரத்தில் வைத்து விட்டாராம்.

இதையடுத்து, திவ்யதர்ஷினி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார். ஆரம்பகட்ட விசாரணை நடத்திய மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, கணவர் கவிராம், பொன்ராஜ், கட்டாயக் கருக்கலைப்பு செய்த கீதா, தாய் லீலாவதி ஆகியோர் மீது 498 (A) 354 (A) 403 506 (II) உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Read More : தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் கட் அவுட்டில் இடம்பெற்ற அஞ்சலை அம்மாள்..!! யார் இவர்..? பின்னணி இதோ..!!

Tags :
அதிமுககருக்கலைப்புபொன்ராஜ்மருமகள்
Advertisement
Next Article