2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - தவெக கூட்டணி கன்ஃபார்ம்..? எடப்பாடி பழனிசாமி சொன்ன சூசக பதில்..!!
சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுக் காலம் இருக்கிறது. தேர்தல் நெருங்கும்போது தான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய கட்சியின் முதல் மாநாட்டை விக்ரவாண்டியில் கடந்த மாதம் நடத்தியபோது, அதில் முக்கிய அறிவிப்பாக ஆட்சிக்கு வந்தால் கூட்டணிக் கட்சிக்கு அதிகாரத்திலும் பங்கு உண்டு என கூறினார். இது தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது. விஜய் இப்படி அறிவித்துள்ள காரணத்தால் மற்ற கட்சித் தலைவர்களிடமும் விஜய் கட்சியுடன் கூட்டணி உண்டா? என்ற கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோவையில் பேட்டியளித்தபோது, அவரிடம் செய்தியாளர் ஒருவர் "2026 தேர்தலில் அதிமுக – தவெக கூட்டணி அமையுமா?" எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த அவர், “சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுக் காலம் இருக்கிறது. தேர்தல் நெருங்கும்போது தான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்” என்றார்.
அதனைத் தொடர்ந்து மற்றொரு செய்தியாளர் ” 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி 2026 இல்லை எப்போதுமே பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே பாஜகவுடன் இனிமேல் கூட்டணி இல்லை கூறிவிட்டேன்” என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
Read More : ”நாடு முழுவதும் 75,000 மருத்துவ இடங்கள் உருவாக்கப்படும்”..!! பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு..!!