மாணவர்களே இந்த நம்பருக்கு உடனே கால் பண்ணுங்க..!! உங்கள பத்தி நாங்க யார்கிட்டயும் சொல்ல மாட்டோம்..!! அமைச்சர் சொன்னதை கவனிச்சீங்களா..?
மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண்ணை பயன்படுத்தி மாணவர்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ”மாணவர்கள் அதிகம் அரசு பள்ளிகளில் சேர்வதால் அதற்கு தேவையான கட்டமைப்புகள் தேவைப்படுவதால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் தொடர் முயற்சியால், உழைப்பால் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய மாற்றம் நடைபெற்று வருகிறது.
திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறைக்கு பெரிய தொகையை ஒதுக்கீடு செய்துள்ளோம். பள்ளிக்கல்வித்துறைக்கு தனியாக பட்ஜெட் போடும் அளவிற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளியாக இருந்தாலும் சரி, அரசுப் பள்ளியாக இருந்தாலும் சரி 10 குழந்தைகள் வெளியே செல்லும்போது ஆசிரியர்களும் உடன் செல்ல வேண்டும். பெற்றோர்களின் ஒப்புதல் பெற்று செல்ல வேண்டும்.
ஆட்சியரின் ஒப்புதலோடுதான் செல்ல வேண்டும் என நாங்கள் கூறியுள்ளோம். மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண்ணை பயன்படுத்தி மாணவர்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். அவர்களது ரகசியங்கள் காக்கப்படும். பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று நினைத்து அவர்கள் அதை மூடி மறைக்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்” என கூறினார்.
Read More : உடல்பருமனால் 18 வகையான புற்றுநோய்கள் உண்டாகும்..!! ஆய்வு முடிவில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!