எதேய்.! ஒருத்தர் இறக்க போறதை முன்னாடியே தெரிஞ்சிக்கலாமா.? AI அதிரடி.!
தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. தற்காலங்களில் மக்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் தகவல் தொழில்நுட்பத் துறை முன்னேற்றத்தை கண்டிருக்கிறது. அதுவும் AI வருகைக்குப் பின்னர் தகவல் தொழில்நுட்பம் எட்ட முடியாத உயரத்திற்கு சென்று விட்டது என்றே கூறலாம்.
இவற்றின் உதவியால் பல்வேறு பணிகள் இன்று மிகவும் எளிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. சிறிய போட்டோ டிசைன்களில் ஆரம்பித்து வீடியோ மற்றும் மொழிபெயர்ப்பு என அனைத்து துறைகளிலும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் கலக்கிக் கொண்டிருக்கிறது. தற்போது இவற்றை வைத்து ஒரு மனிதர் எப்போது இறப்பார் என்பதையும் கணித்து விடலாம் என புதிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
Life2vec என்ற அல்காரித முறையை பயன்படுத்தி ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தில் ஒருவரது இறப்பு எப்போது இருக்கும் என்பதை துல்லியமாக கண்டுபிடித்து விடலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த டூலை பயன்படுத்தி ஒருவரிடம் கேட்கும் 4 கேள்விகளை வைத்து அவரது இறப்பு எப்போது இருக்கும் என்பதை சொல்லிவிட முடியும். மேலும் இந்த புதிய டூல் 75% சரியான முடிவுகளை கொடுத்திருப்பதாகவும் இந்த தொழில்நுட்பத்தை வடிவமைத்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர் .