அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. பண்டிகை காலத்தை முன்னிட்டு 4% அகவிலைப்படி உயர்வு..!!
பண்டிகை காலத்தை முன்னிட்டு, ஊழியர்களுக்கு சிக்கிம் மாநில அரசு அகவிலைப்படி உயர்த்தி ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. முதல்வர் பிரேம் சிங் தமாங் தலைமையிலான மாநில அரசு, பண்டிகை தினத்தை முன்னிட்டு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படியை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் வி.பி.பதக் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு முறை 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், ஓய்வூதியம் பெறுவோருக்கு 4% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் பணியாளர்கள் மற்றும் மாநில அரசின் வழக்கமான ஊதிய விகிதத்தில் திருத்தப்பட்ட ஊதியம் பெறும் பணிக்குக் கட்டணம் பெற்ற நிறுவனங்களுக்கும் அகவிலைப்படி வழங்க அனுமதிக்கப்படும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2024 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும். பண்டிகை காலத்தில் அரசு அறிவித்துள்ள இந்த அறிவிப்பு மாநில அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, சிக்கிம் மாநில அரசு ஊழியர்கள் 46% அகவிலைப்படியைப் பெற்று வந்தனர். தற்போது 4% உயர்த்தப்பட்டதன் மூலம் அது 50% ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம், மத்திய அரசு ஊழியர்களுக்கும் மாநில அரசு ஊழியர்களுக்கும் கிடைக்கும் அகவிலைப்படிக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. மேற்கு வங்க மாநில அரசு ஊழியர்கள் அகவிலைபடி உயர்வு எதிர்பார்க்கும் நிலையில், இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தற்போது அவர்கள் 14% அகவிலைப்படியைப் பெற்று வருகின்றனர்.
Read more ; மதுவை ஒழிக்க முடியலனா திமுக அரசு பதவி விலக வேண்டும்..! சீறிய அன்புமணி ராமதாஸ்