ஆஹா..!! இந்த மாவட்டங்களில் இன்று பலத்த மழை இருக்காம்..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், ஆங்காங்கே அவ்வபோது கனமழை பெய்து வருகிறது. நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், 14 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், சென்னை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், திருவாரூர் ஆகிய 14 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read More : கணவன் சாப்பிட்ட தட்டில் மனைவி சாப்பிட்டுவது ஏன்..? பாலூட்டும் குழந்தைகளுக்கு இவ்வளவு நன்மைகளா..?