ஆஹா..!! இந்த தவறை பண்ணிட்டு விஜய் மாநாட்டுக்கு போன வசமா மாட்டிப்பீங்க..!! வழக்கும் பாயும்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்று நடைபெறவுள்ள நிலையில், யாரும் மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக் கூடாது என விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெறுகிறது. இதற்காக விஜய் நேற்றே விக்கிரவாண்டிக்கு சென்றுவிட்டார். அவர் தங்குவதற்காக விக்கிரவாண்டியில் வீடு ஒன்று வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில்தான் விஜய் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தங்கியிருக்கும் இடத்தில் இருந்து அவர் கேரவன் மூலம் மாநாட்டுக்கு வருவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், விஜய் தனது மாநாட்டை எப்படி நடத்த வேண்டும் என சில வழிமுறைகளை வகுத்துள்ளார். அதில், பெண் போலீஸாரிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். மது அருந்திவிட்டு மாநாட்டிற்கு வரக்கூடாது. சாலையில் எந்த வாகனங்களுக்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது. கிணறு, ஆபத்தான பகுதிகளில் கவனமாக இருக்க வேண்டும். இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் சாகசங்களை செய்யக் கூடாது. பேருந்து, வேன்களில் அனுமதிக்கப்பட்ட அளவிலேயே ஆட்களை ஏற்றிக் கொண்டு வர வேண்டும். மருத்துவக் குழு, தீயணைப்புத்துறைக்கு உரிய ஏற்பாடுகள் செய்து தர வேண்டும்.
அதேபோல் டாஸ்மாக் கடைகளுக்கு முன்பாக வாகனங்களை நிறுத்தவே கூடாது. குடித்துவிட்டு வரக் கூடாது என விஜய் சொல்லிவிட்டார், குடித்துவிட்டு போனால் என்ன, விஜய் பார்க்கவா போகிறார் என நினைத்தால் அது தவறு. மாநாட்டு வருபவர்கள் ஒவ்வொருவரையும் ப்ரீத் அனலைசர் கருவி மூலம் சோதனை செய்யப்படுவார்கள். அவர்கள் குடிக்கவில்லை என்றால் மட்டுமே உள்ளே அனுப்பப்படுவார்களாம். அதாவது, போலீஸார் வைத்திருக்கும் கருவி அது. அதில், ஒரு ஸ்ட்ரா போன்று பைப் இருக்கும். அதில், ஊத வேண்டும். அப்போது அந்த மீட்டரில் எவ்வளவு ஆல்கஹால் அவரது சுவாசத்தில் இருக்கிறது என்பதை காட்டும். இதை வைத்து அவர் மீது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது உள்ளிட்ட கேஸ்கள் போடப்படும்.
Read More : தவெக மாநாட்டில் தொண்டர்களுக்காக செய்யப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன..? விஜய் எப்போது பேசுவார்..?