For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அட!... இது தெரியாம போச்சே!... இடி மின்னலின்போது மொபைல் யூஸ் பண்ணலாமா?… பாதுகாப்பானது தான்!

11:40 AM Nov 08, 2023 IST | 1newsnationuser3
அட     இது தெரியாம போச்சே     இடி மின்னலின்போது மொபைல் யூஸ் பண்ணலாமா … பாதுகாப்பானது தான்
Advertisement

இடி மின்னலின்போது மொபைல் போன்களை பயன்படுத்தலாமா கூடாதா என்பது குறித்துப் பார்க்கலாம்.

Advertisement

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2800 பேர் இடி மின்னல் தாக்கி உயிரிழப்பு ஏற்படுகிறது. இது தவிரப் பல ஆயிரம் கால்நடைகளும் கூட உயிரிழக்கிறது. பொதுவாக மின்னல் தாக்கும் போது அதில் பல லட்சம் வால்ட் மின்சாரம் பாயும். ஒவ்வொரு ஆண்டும் இனி மின்னல் தாக்குவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. உலகெங்கும் பல இடங்களில் காட்டுத்தீயைக் கூட இடி மின்னல் தாக்கி ஏற்படுகிறது. இடி மின்னால் பல வழிகளில் பாதிப்பு ஏற்படும். முதலில் நேரடியாக மின்னல் நம்மைத் தாக்குவது.. ஆனால், இதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு.

அடுத்து ground current அதாவது இடி மின்னல் தாக்கும் இடத்தை சுற்றிலும் சில அடி தொலைவுக்கு மின்சாரம் அதிகமாக இருக்கும். அதில் சிக்குவதால் ஏற்படும் பாதிப்பு. அடுத்து இடிப் பாயும் போது, அதில் உருவாகும் வலிமையான மின்சாரம் உலோக பொருளில் கடந்து செல்லும் அதுபோன்ற நேரங்களில், நாம் அதைத் தொடும் போது எதிர்பாராத விதமாகப் பாதிப்புகள் ஏற்படும். பெரும்பாலும் திறந்த வெளியில் இருக்கும் போது தான் இடி மின்னல் தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனால் இடி மின்னல் தாக்கும் போது முடிந்தவரை முதலில் வீடு அல்லது கட்டிடங்களுக்குச் சென்றுவிடுவது நமக்குப் பாதுகாப்பாக இருக்கும். கட்டிடங்கள் இல்லை என்றால் காருக்குளே செல்லலாம்.

அதாவது, நாம் காருக்குள் இருக்கும் போது அது faraday cafe போலச் செயல்படும். மின்சாரம் அதன் வழியாகப் பாய்ந்து சென்றுவிடும். இதனால் உள்ளே இருக்கும் நாம் பாதுகாப்பாக இருப்போம். இடி மின்னல் தாக்கும் போது காரில் கதவைத் தொடாமல் இருந்தால் போதும். அடுத்து நம்மில் பலரும் இடி மின்னல் அடிக்கும் பொது மொபைல் போனில் பேசுவது ஆபத்தானது என நினைக்கிறோம். இதற்கு முக்கிய காரணம் மின்னல் தாக்கி உயிரிழப்போரிடம் இருக்கும் மொபைல் உருகிப் போய் இருக்கும். இடி மின்னல் அதில் தாக்குவதாக நாம் நினைப்பதே இதற்குக் காரணமாகும். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. இடி மின்னல் அடிக்கும் போது மொபைலை பயன்படுத்துவது பாதுகாப்பானது தான். இதனால் எந்தவொரு ஆபத்தும் ஏற்படாது.

மொபைலை சார்ஜ் போட்டுப் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் சார்ஜ் போடும் போது வெளியே இருந்து மின்சாரம் உள்ளே வருகிறது. இதுபோன்ற நேரத்தில் மின்னலில் இருந்து வரும் மின்சாரம் தாக்கி பாதிப்பு ஏற்படலாம். எனவே, சார்ஜ் போட்டு மொபைலை பயன்படுத்துவது ஆபத்தானது. அதேநேரம் மொபைல் என்று இல்லை லேப்டாப் உள்ளிட்ட எந்தவொரு பொருளையும் சார்ஜ் போடலாம் பயன்படுத்துவது பாதுகாப்பானது தான். பிறகு ஏன் இடி மின்னல் தாக்கியவர்களின் மொபைல் உருகிப் போகிறது என்ற கேள்விக்கு உங்களுக்கு வரலாம். இதற்குக் காரணம் இடி மின்னல் தாக்கும் போது அதீத வெப்பம் உருவாகும். அதன் காரணமாகவே மொபைல் உருகுகிறது. அதற்கும் மின்னல் உங்களைத் தாக்குவதற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.

Tags :
Advertisement