For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாநாடு முடிந்து வீட்டிற்கு பத்திரமாக செல்லுங்கள்..!! - தவெக தலைவர் விஜய் வேண்டுகொள்

After the conference go home safely..!! - Wish TVK Vijay
06:52 PM Oct 27, 2024 IST | Mari Thangam
மாநாடு முடிந்து வீட்டிற்கு பத்திரமாக செல்லுங்கள்       தவெக தலைவர் விஜய் வேண்டுகொள்
Advertisement

நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் கொடி பாடலுடன் தொடங்கி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பேசியது காண்போரை சிலிர்க்க வைத்தது.  அவர் கூறுகையில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். இங்க யாரும், மேலே கீழ என்ற எந்த பாகுபாடும் பார்க்கப் போவதில்லை. நாம் எல்லோரும் ஒன்றுதான் எல்லோரும் சமம்தான். அறிவியலும், தொழில்நுட்பமும் மட்டும்தான் மாறணுமா, அரசியல் மாறக்கூடாதா. இங்கு எப்போதும் மாறாதது மனித பிறப்பு பசி வேலை உழைப்பு பணம் என சில மட்டும்தான்.

Advertisement

அரசியல் நமக்கு ஒத்துவருமா என்று பூதக்கண்ணாடி வைத்து யோசித்தால் சரிவராது. சினிமாவில் நடிக்கலாம் பணம் சம்பாதிக்கலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். சினிமாவில் சம்பாதித்து விட்டுச் செல்லாமல் என்னை வாழ வைத்த மக்களுக்கு நல்லது செய்யவே தற்போது வந்திருக்கிறேன். வெறுப்பு அரசியலை எப்போதும் கையில் எடுக்க மாட்டோம். வாழவைத்த மக்களுக்காக நன்மை செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன் என்றார்.

கடவுள் மறுப்பு மட்டும் கையில் எடுக்கப் போறதும் இல்லை உடன்பாடும் இல்லை; யாருடைய கடவுள் நம்பிக்கைக்கு எதிரானவர்கள் இல்ல; அண்ணாவின் ஒன்றே குலம் ஒருவனே தேவன் எங்கள் கொள்கை- பெரியார் போராடிய பெண் உரிமை சமூக நீதி, பகுத்தறிவை ஏற்போம்; கல்வி வள்ளல் பச்சைத் தமிழர் காமராஜர், அண்ணல் அம்பேதர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோர்தான் எங்களது கொள்கை தலைவர்கள்.

தொடர்ந்து, எதிரிகள்தான் நமது வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற கொள்கையை எடுத்தப்பவே யாருடைய எதிரி என்பதை தீர்மானித்துவிட்டோம்; இதை அறிவித்த போதே கதற ஆரம்பிச்சிட்டாங்க.. மக்களை மதம், ஜாதி, பாலினம் பிளவுவாத அரசியல் சித்தாந்தம் மட்டும்தான் எதிரியா? ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் எதிர்ப்போம்... ஊழல் ஒரு வைரஸ் மாதிரி பழகிப் போய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. மதம் பிடிச்ச யானை மாதிரி பிளவுவாத அரசியல் தெரிந்துவிடும்.. அது தன்னையே வெளிப்படுத்திவிடுமோ.. ஊழல் என்பது கண்டுபிடிக்க முடியாது; கருத்தியல் பேசி கொள்கை நாடகமாடும்.. கரெப்ஷன் கபடதாரிகள்தான் நம்மை இப்போ ஆண்டு கொண்டிருக்கின்றனர்

ஜாதியை வைத்து இந்த மண்ணை வேற மாதிரி மாற்ற மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்; மக்களோடு மக்களாக நிற்பதுதான் எங்களது நிரந்தர அரசியல் பாதை. 2026 தேர்தலில் ஒவ்வொரு ஓட்டும் அணுகுண்டாக விழும் என்றார். கடைசியாக பவர்புல் தலைமை இல்லாத உள்ள ஒரு நாடும் அதன் படை தளபதியாக சின்ன பையன் போருக்கு செல்வதையும் மையமாக வைத்து குட்டிக்கதை கூறிய விஜய் மாநாடு முடிந்து அனைவரும் பத்திரமாக வீடு திரும்பும் படி ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை கேட்டுக்கொண்டார்.

Read more ; அனிதாவின் மரணம் என் தங்கை வித்யாவின் மரணத்திற்கு இணையான வலியை தந்தது..!! – தவெக தலைவர் விஜய் உருக்கம்

Tags :
Advertisement