For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மனைவி இறந்ததும் பெண்களை அழைத்து வந்து அடிக்கடி உல்லாசம்..!! தட்டிக் கேட்ட வீட்டு உரிமையாளரின் பைக் கொளுந்துவிட்ட எரிந்த சம்பவம்..!!

Nataraj's wife died a year ago. After that, he would often come home after drinking. When he did that, he would bring many women to his house.
07:41 AM Dec 25, 2024 IST | Chella
மனைவி இறந்ததும் பெண்களை அழைத்து வந்து அடிக்கடி உல்லாசம்     தட்டிக் கேட்ட வீட்டு உரிமையாளரின் பைக் கொளுந்துவிட்ட எரிந்த சம்பவம்
Advertisement

சென்னை கீழ்ப்பாக்கம், டி.பி.சத்திரம், கால்வாய் சாலை 1-வது தெருவில் வசித்து வருவபர் வினோத். இவர், தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் வெளியே நிறுத்துவது வழக்கம். இந்நிலையில், திடீரென அவரது வாகனம் தீப்பிடித்து எரிந்தது. பின்னர், அக்கம்பக்கத்தினரின் சத்தம் கேட்டு வெளியே சென்று வினோத் பார்த்தபோது, வினோத்தின் வாகனம் உள்பட 5 வாகனங்கள் எரிந்து சாம்பலானது. இதையடுத்து, வினோத் கொடுத்த தகவலின் பேரில் டி.பி.சத்திரம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

Advertisement

அப்போது, ​​வீட்டின் முதல் தளத்தில் வசித்து வந்த நடராஜ் என்ற (65) முதியவர் இருசக்கர வாகனங்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தெரியவந்தது. ஆனால், அவரை விசாரிக்க முடிவு செய்தபோது, ​​தலைமறைவாகிவிட்டார். மீண்டும் வீட்டிற்கு வந்த அவர், எதுவும் நடக்காதது போல் நடித்துள்ளார். பின்னர் அவரது இருசக்கர வாகனம் காணாமல் போனதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். ஆனால், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்த நடராஜை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ”நடராஜ், 6 லட்சம் ரூபாய் கொடுத்து 6 ஆண்டுகளுக்கு முன் மனைவியுடன், வினோத் வீட்டில் லீசுக்கு குடியேறினார். இதற்கிடையே, நடராஜின் மனைவி ஓராண்டுக்கு முன் இறந்து விட்டார். பிறகு அடிக்கடி மது அருந்திவிட்டு வருவார். அப்படிச் செய்யும்போது பல பெண்களை தன் வீட்டிற்கு அழைத்து வருவார். இதனா, வீட்டின் உரிமையாளர் வினோத், சிசிடிவி கேமராவை பொருத்தினார்.

இதைப் பார்த்த முதியவர் நடராஜ் பலமுறை சிசிடிவியை உடைக்க முயன்றது கேமராவில் பதிவாகியுள்ளது. ஒரு நாள் நடராஜ், ஒரு பெண்ணை அழைத்து வந்தார். குடிபோதையில் அந்த பெண் வீட்டை விட்டு வெளியே வர மறுத்துள்ளார். இதனால், முதியவர் நடராஜ் அந்த பெண்ணை சரமாரியாக பிடித்து வெளியே இழுத்துள்ளார். இதுவும் கேமராவில் பதிவாகியுள்ளது. இதை பார்த்த வினோத், நடராஜை வீட்டை காலி செய்யும்படி கூறியுள்ளார்.

ஆனால் லீஸ் பணத்தை கொடுத்தால் தான் காலி செய்வேன் என முதியவர் கூறியுள்ளார். இதையடுத்து, நடராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகவும், 3 மாதங்களுக்குள் பணத்தை செலுத்த வினோத் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நடராஜ், பழிவாங்கும் நடவடிக்கையாக அப்பகுதியில் இருந்த வினோத்தின் வாகனம் உள்ளிட்ட மற்ற வாகனங்களுக்கு தீ வைத்தது விசாரணையில் தெரியவந்தது.

Read More : எந்தெந்த நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது தெரியுமா..? காரணமும் தண்டனையும்..!!

Tags :
Advertisement