குட் நியூஸ்...! பொங்கலை முன்னிட்டு முன்கூட்டியே வரும் மகளிர் உரிமைத் தொகை...! அமைச்சர் அறிவிப்பு
மகளிர் உரிமைத்தொகை பெற்றுவரும் மகளிருக்கு பொதுவாக ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி வங்கிக் கணக்கில் ரூ.1,000 வழங்கப்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த முறை முன்கூட்டியே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் செய்தியாளர்கள் பேசிய அமைச்சர்; பொங்கல் தொகுப்புடன் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படும். நடப்பாண்டில் பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதில், நிதிச்சுமை காரணமாக கடினமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், பொங்கல் தொகுப்பு பொருட்களுக்கான நிதியை முதல்வர் வழங்கியுள்ளார். வரும் காலங்களில் நிதி நிலைமையை சீராக்கும் நடவடிக்கை மூலம் நல்ல சூழ்நிலை உருவாகும் என நம்புகிறேன். மகளிர் உரிமைத்தொகை பெற்றுவரும் மகளிருக்கு பொதுவாக ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி வங்கிக் கணக்கில் ரூ.1,000 வழங்கப்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த முறை முன்கூட்டியே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்.
இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் பொருட்கள்:
தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாக பொங்கல் பண்டிகை தமிழகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 2025-ம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு வழங்குவதற்கான டோக்கன்கள் வரும் ஜனவரி 9ஆம் தேதி முதல் வழங்கப்படும்.