முதல் மனைவியை ஆசையாய் சாப்பிட சொன்ன கணவர்; கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்..
சென்னை, அரும்பாக்கம், பாஞ்சலி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் திலிப் சிங். இவரது 45 வயது மனைவி பார்வதி, தனியார் நிறுவனத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், திலிப் சிங், இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், திலிப் சிங் தனது இரு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். அவர்கள் ஒன்றாக வசித்து வந்த வீடு, அவரது முதல் மனைவி பார்வதியின் வீடு என்பதால் பார்வதிக்கும் அவரது கணவர் திலிப் சிங்கிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை திலிப் சிங் தனது 2வது மனைவி தயார் செய்த சாப்பாட்டை பார்வதிக்கு கொடுத்து சாப்பிடுமாறு கூறியுள்ளார்.
ஆனால் பார்வதி அதை சாப்பிட மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த திலிப் சிங், பார்வதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில், திலிப் சிங் பார்வதியை கல் மற்றும் கத்தியால் தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த பார்வதியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே, பார்வதி சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த அரும்பாக்கம் காவல் நிலைய போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், திலிப் சிங் தனது மனைவியை தாக்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அரும்பாக்கம் காவல் நிலை ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் திலிப் சிங்கை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய கத்தி மற்றும் கல் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Read more: உடலுறவுக்கு மறுத்த மனைவி; 13 வயது மகளை உல்லாசத்திற்கு அழைத்த கொடூர தந்தை..