அடி தூள்..!! இனி ஞாயிற்றுக்கிழமையும் பத்திரப்பதிவு செய்யலாம்..? பக்கா பிளான் போட்ட தமிழ்நாடு அரசு..!! விரைவில் அறிவிப்பு..?
ஞாயிற்றுக்கிழமையும் பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கான வசதியை அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் 582 சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குதான் சொத்து வாங்குவோர் தங்களது பத்திரங்களை பதிவு செய்துக் கொள்வார்கள். சொத்தின் மதிப்பிற்கேற்ப பதிவு கட்டணங்களையும் ஆன்லைனில் செலுத்தலாம். பிறகு பத்திரப்பதிவுக்கான நாள், நேரம் கொடுக்கப்பட்டு ஒரு டோக்கன் வழங்கப்படும். அந்த நாளில் சார் பதிவாளர் அலுவலகம் சென்று பத்திரப்பதிவை செய்துக் கொள்ளலாம்.
அதேபோல், முகூர்த்த நாட்களில் அதிகளவு பத்திரப்பதிவு நடைபெறும் என்பதால், அந்த நாட்களில் கூடுதல் டோக்கன் வழங்கப்படும். தற்போது, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் சொத்து வாங்குவோரும், விற்போரும் பத்திரப்பதிவில் கையெழுத்திட விடுப்பு எடுத்துவிட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு கடந்த 2023ஆம் ஆண்டு முதல் சனிக்கிழமையும் பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கான வசதியை அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விடுமுறை நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் பத்திரப்பதிவு செய்ய கூடுதல் கட்டணமாக ரூ.1,000 வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது.