முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

B.Com பட்டதாரியா நீங்கள்..? கணக்காளராக சூப்பர் சான்ஸ்... மிஸ் பண்ணிடாதீங்க!!

Adi Dravidian and tribal students will be given free class for accountant post.
03:25 PM Nov 25, 2024 IST | Mari Thangam
Advertisement

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு பட்டய கணக்காளர் இடைநிலை (Chartered Account- Intermediate), நிறுவன செயலாளர் இடைநிலை (Company Secretary Intermediate), செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் -இடைநிலை (Cost and Management Account Intermediate) ஆகிய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற தாட்கோவில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

Advertisement

தாட்கோவின் முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு பட்டய கணக்காளர், செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் இடைநிலை (Cost and Management Account Intermediate) ஆகிய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

என்னென்ன தகுதி? இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றம் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சி பெற விரும்பும் மாணயாக்கர்கள் இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

ஒரு வருட பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணாக்கர்களுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு வசதிகள் தாட்கோ மூலம் ஏற்பாடு செய்யப்படும். தகுதியுள்ள மாணக்கர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளத்தின் மூலம் (www.tahdco.com) பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Read more ; இரயில் கழிவறையில் அமர்ந்து பயணம் செய்த புதுமணப்பெண்..!! கொதித்த நெட்டிசன்கள்!

Tags :
Adi Dravidian and tribal studentsfree class for accountant post
Advertisement
Next Article