மகிழ்ச்சி...! 5,852 குடும்பங்களுக்கு ரூ.6,000 வெள்ள நிவாரணத்துடன் கூடுதல் நிவாரணம்...! தமிழக அரசுக்கு பரிந்துரை...!
எண்ணூரில் கச்சா எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள 5,852 குடும்பங்களுக்கு ரூ.6,000வெள்ள நிவாரணத்துடன் கூடுதல் நிவாரணம் வழங்கதமிழ்நாடு அரசுக்கு சென்னை மாநகராட்சி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் அதிகனமழை பெய்தது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் குறிப்பிட்ட சில வட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் மிக்ஜாம் புயல் வெள்ளம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.6000 ரொக்கமாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
புயல் மற்றும் அதிகனமழை காரணமாக சில பகுதிகளில் ATM மையங்கள் இயங்காததாலும், பயனாளர்களின் வங்கிக் கணக்கு எண்களை சேகரித்து நிவாரணம் வழங்க காலதாமதம் ஆகும் என்பதாலும், மேலும் பாதிக்கப்பட்ட பலர் தங்களது ATM அட்டை, வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை இழந்திருக்கக்கூடும் என்பதாலும், அவர்களுக்கு உடனடியாக பயனளிக்கும் வகையில் நிவாரணத்தொகை ரொக்கமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் எண்ணூரில் கச்சா எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள 5,852 குடும்பங்களுக்கு ரூ.6,000வெள்ள நிவாரணத்துடன் கூடுதல் நிவாரணம் வழங்கதமிழ்நாடு அரசுக்கு சென்னை மாநகராட்சி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் கசிவுக்கு காரணமான சிபிசிஎல் நிறுவனத்திடம் தொகையை பெற்று, பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணமாக வழங்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.