For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதானி மீதான லஞ்ச குற்றசாட்டு.. ரூ. 2.2 லட்சம் கோடி பங்குகளை இழந்த அதானி குழுமம்..!!

Adani group stocks' combined mcap erodes by Rs 2.45 trn amid allegations
01:11 PM Nov 21, 2024 IST | Mari Thangam
அதானி மீதான லஞ்ச குற்றசாட்டு   ரூ  2 2 லட்சம் கோடி பங்குகளை இழந்த அதானி குழுமம்
Advertisement

அடுத்த 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் லாபம் கிடைக்க உள்ள சோலார் ஒப்பந்தத்தைப் பெற அதானி இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கினார் என்று நேற்று (நவம்பர் 20) அமெரிக்க வழக்கறிஞர்கள் அமைப்பு ஒன்று குற்றம் சாட்டியிருந்தது. இதனால், இன்று (நவம்பர் 21) காலை பங்குச்சந்தை தொடங்கியதுமே, அதானி குழுமத்தின் முக்கிய மூன்று நிறுவனங்களின் பங்குகள் 20 சதவிகித வீழ்ச்சியைக் கண்டன.

Advertisement

காலை பங்குச் சந்தை தொடங்கியவுடன் ரூ. 2.2 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை அதானி குழுமம் இழந்துள்ளது. சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக ரூ. 2,100 கோடி லஞ்சமாக இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி கொடுத்ததாகவும், அதனை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாகவும் நியூ யார்க் நீதிமன்றத்தில் குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலை பங்குச் சந்தை தொடங்கியவுடன் அதானி குழுமங்களின் பங்குகள் 20 சதவிகிதம் வரை வீழ்ச்சியை கண்டதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக அதானி எண்டர்பிரைசஸ் 20.86 சதவிகிதமும், அதானி போர்ட்ஸ் 17.01 சதவிகிதமும் சரிவைக் கண்டுள்ளது. அதானி பவர் - 11.03%, அதானி எனர்ஜி சொல்யூஷன் - 19.12%, அதானி கிரீன் எனர்ஜி - 17.38%, அதானி டோட்டல் கேஸ் - 12.71%, அதானி வில்மார் - 9.35%, ஏசிசி லிமிடெட் - 8.88%, அம்புஜா சிமெண்ட்ஸ் - 10.49%, என்டிடிவி - 8.39% சங்கி இண்டஸ்ட்ரீஸ் - 7.30% சரிவைக் கண்டுள்ளது. அதானி குழுமங்கள் வியாழக்கிழமை காலை இழந்த மொத்த பங்குகளின் மதிப்பு ரூ. 2.2 லட்சம் கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

Read more ; விவாகரத்து வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. இந்த முறையும் எஸ்கேப் ஆன தனுஷ்..!! என்னதான் பிளான்?

Tags :
Advertisement