For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தொட்ட எல்லாம் படமும் செம ஹிட்டு.. ரஜினி, அஜித்-க்கு லக்கி ஹீரோயின்..!! யாரு தெரியுமா..?

Actress Shuma Quresh has shown her realistic performance in Tamil films and has won the hearts of fans
04:07 PM Dec 29, 2024 IST | Mari Thangam
தொட்ட எல்லாம் படமும் செம ஹிட்டு   ரஜினி  அஜித் க்கு லக்கி ஹீரோயின்     யாரு தெரியுமா
Advertisement

தமிழில் ஒரு சில படங்கள் நடித்தாலும், சில நடிகைகள் ரசிகர்களின் மனதை கவர்ந்து விடுகின்றனர். அந்த வகையில், தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும், அழகாலும், ரசிகர்களை கவர்ந்திழுத்த நடிகை ஷுமா குரேஷ். டெல்லியைச் சேர்ந்த, இவர் அனுராக் காஷ்யாப் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான, 'கேங்க்ஸ் ஆஃப் வாசேப்பூர்' படத்தில் மோனிஷா என்கிற துணை கதாபாத்திரத்தில் மூலம் சினிமாவில் நுழைந்தார்.

Advertisement

சிறிய வேடம் என்றாலும், இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டை  குவித்தது. எனினும் அடுத்தடுத்த வாய்ப்புகள் இவருக்கு எளிதாக கிடைக்கவில்லை. பல போராட்டங்களை கடந்தே இன்று பாலிவுட் திரையுலகில் தன்னை ஒரு, நிலையான நடிகை என்று நிலைநிறுத்தி கொண்டார். பாலிவுட் திரையுலகை தாண்டி, மராத்தி, மலையாளம், இங்கிலீஷ், தமிழ் போன்ற மொழிகளிலும் கவனம் செலுத்த துவங்கினார்.

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'காலா'. இந்த படத்தில் ரஜினிகாந்தின் முன்னாள் காதலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரஜினிகாந்துக்கு இணையான முதிர்ச்சியை நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் நெஞ்சங்களிலும் குடியேறினார். இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், தனுஷ் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம்... மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து ஹுமோ குரேஷி 'வலிமை' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.  2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான, இந்த படத்தை போனிக்கபோர் சுமார் 150 கோடி செலவில் தயாரித்திருந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸில் இந்த படமும் சுமார் 234 கோடி வரை வசூலித்ததாக கூறப்பட்டது. இப்படி ரஜினிகாந்த் மற்றும் அஜித் இருவருக்குமே வசூலை கொடுத்த இரண்டு படங்களில் நடித்து ராசியான நடிகையாக பார்க்க பட்ட ஹுமோ குரேஷி, தற்போது முழுமையாக பாலிவுட் திரை உலகில் கவனம் செலுத்தி வருகிறார். 38 வயதான இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more ; ஒரு பெண்ணுக்கு இரண்டு கள்ளக்காதலர்கள் போட்டி.. கடைசியில் நடந்த பகீர் சம்பவம்.. நடந்தது என்ன?

Tags :
Advertisement