“எம்.ஜி.ஆர் செய்த அந்த காரியத்தை, நான் என் கண்ணால் பார்த்தேன்” பிரபல நடிகை அளித்த தகவல்..
சினிமா, அரசியல் என்று கால் மிதித்த இடங்களில் எல்லாம் வெற்றிக்கொடி நாட்டியவர் தான் எம். ஜி. ராமச்சந்திரன். கேரளாவை பூர்வீகமாகக்கொண்டு, இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்த இவர், தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். தமிழ்நாட்டில் உள்ள நாடக கம்பெனியில் இணைந்து பல நாடகங்களில் நடித்து வந்த இவர், சதிலீலாவதி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தனது 20 வயதிலேயே, பக்குவமான நடிப்பை வெளிப்படுத்திய இவரை, இயக்குநர்கள் பலருக்கு பிடித்துவிட்டது. இந்நிலையில், கலைஞர் கருணாநிதியுடன் இவருக்கு ஏற்பட்ட நட்பு பெரிய வெற்றியை கொடுத்தது. ஆம், எம்ஜிஆரின் நடிப்பும், கலைஞரின் வசனமும் பலரின் மனதை கவர்ந்தது. அந்த வகையில், கலைஞர் கருணாநிதி வசனத்தில் எம்.ஜி. ஆர் அவர்கள் மலைக்கள்ளன், மந்திரிகுமாரி போன்ற பல படங்களில் நடித்தார்..
பின் நாட்களில், அரசியலில் நுழைந்து முதலமைச்சர் ஆனார். மக்களின் மனதில், எம்ஜிஆர் என்றாலே உதவும் குணம், தைரியம் என்ற எண்ணங்கள் தான் இருந்தது. அந்த வகையில், நடிகை லட்சுமி எம். ஜி.ஆர் குறித்து அளித்த பேட்டி ஒன்று, தற்போது வைரலாகி வருகிறது. அவர் பேசுகையில், "எம்ஜிஆருடன் இதய வீணை என்ற படத்தில் நடித்தேன். அந்தப் படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்த போது, அவர் ஏதோ ஒன்றை நீண்ட நேரமாக பைனாகுலரில் பார்த்துக் கொண்டிருந்தார். அதனால் நான் அவர் அருகில் சென்று, என்ன சார் பாக்குறீங்கன்னு கேட்டேன். அப்போது அவர் சைகையில், அமைதியா இரு என்றார். மேலும் அங்கே போய் ஸ்நாக்ஸ் சாப்பிடுங்க என்றார்.
பின்னர் சிறிது நேரத்தில், இன்று ஷூட்டிங் வேண்டாம் என்று பேக்கப் செய்யும் படி கூறினார். மேலும், பெண்களை பத்திரமாக அனுப்புங்க என்றார். இதனால் நாங்களும் வேனில் ஏறி அமர்ந்து விட்டோம். அப்போது அங்கு ஒரு கும்பல் பெண்களை கடத்துவதற்காக காரில் வந்தது. இதைப் பார்த்த ஸ்டண்ட் யூனியன் ஆட்கள், அவர்களுடன் பயங்கர சண்டை போட்டார்கள். இதனால் எம்ஜிஆரும் அவர்களுடன் சண்டை போட்டார். படத்தில் இல்லாமல், நிஜத்தில் அவர் அத்தனை பேரை அடிப்பதை நான் என் கண்ணால் பார்த்தேன். அது மட்டும் இல்லாமல், இது போன்ற சம்பவம் நடக்க போகிறது என்பதை அவர் எப்படி கண்டுபிடித்தார் என்று கூட தெரியவில்லை. அவருக்கு அவ்வளவு புத்தி கூர்மை" என்றார்.
Read more: சிக்கன் லிவர் Vs மட்டன் லிவர்.. இரண்டில் எது பெஸ்ட்..? யாரெல்லாம் லிவர் சாப்பிடக்கூடாது..?