குடிபோதையில் செம ரகளை..!! பக்கத்து வீட்டுக்காரரை ஆபாச வார்த்தையால் வசைபாடிய வில்லன் நடிகர் விநாயகன்..!! அதிர்ச்சி வீடியோ..!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான படம் ஜெயிலர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தில் வில்லன் கேரக்டரில் விநாயகன் நடித்திருந்தார். மலையாள திரையுலகை சேர்ந்த இவர், ஜெயிலருக்கு முன் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், இவர் சமீப காலமாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
இந்நிலையில் தான், வில்லன் நடிகர் விநாயகன், தனது வீட்டில் குடித்துவிட்டு, ஆபாசமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது வீட்டின் அருகில் குடியிருப்பவர்களை விநாயகன், கடுமையான வார்த்தைகளால் திட்டுகிறார். மேலும், அவர் இடுப்பில் கட்டியிருந்த லுங்கி கழன்று விழுகிறது. இதை பிடிக்க கூட அவரால் முடியவில்லை.
விநாயகத்தின் இந்த வீடியோ தற்போது பெரும் சர்ச்சையையும், முகம் சுளிக்கும் வகையிலும் உள்ளது. ஒரு சிலர், இவர் நடிகரா..? இல்லை குடிகாரரா..? என்றெல்லாம் விமர்சித்து வருகின்றனர். கடந்தாண்டும் கூட ஹைதராபாத் விமான நிலையத்தில் விநாயகன் மதுபோதையில் ரகளை செய்தார். அப்போது, விசாரணைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இப்படி தொடர்ந்து சர்ச்சைக்கு மேல் சர்ச்சையில் சிக்கி வரும் விநாயகன், தற்போது மீண்டும் பிரச்சனையில் மாட்டிக் கொண்டுள்ளார்.
என்னை மன்னிச்சிருங்க
வில்லன் நடிகர் விநாயகன் குடித்துவிட்டு ஆபாசமாக பேசும் வீடியோ வைரலான நிலையில், தன்னுடைய முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஒரு நடிகராகவும், ஒரு மனிதராகவும் என்னால் பல விஷயங்களை கையாள முடியவில்லை. இதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
Read More : பேரதிர்ச்சி..!! ரூ.60,000-ஐ தாண்டிய தங்கம் விலை..!! ஒரே நாளில் ரூ.600 உயர்வு..!! நகைப்பிரியர்கள் ஷாக்..!!