For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நகைக்கடை உரிமையாளரை திருமணம் செய்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்..!! இதாச்சும் உண்மையா..?

04:09 PM Apr 23, 2024 IST | Chella
நகைக்கடை உரிமையாளரை திருமணம் செய்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்     இதாச்சும் உண்மையா
Advertisement

நடிகை கீர்த்தி சுரேஷுக்கும், நகைக்கடை உரிமையாளரின் மகனுக்கும் விரைவில் திருமணம் என பேசப்படுகிறது.

Advertisement

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், பேபி ஜான் படம் மூலம் பாலிவுட் சென்றிருக்கிறார். அவர் இப்படி பிசியாக படங்களில் நடித்துக் கொண்டிருக்க, கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் என மீண்டும் பேச்சு அடிபட்டு வருகிறது. இம்முறை நகைக்கடை உரிமையாளரின் மகன் தான் மாப்பிள்ளை என தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவை சேர்ந்த நகைக்கடை உரிமையாளரின் மகனும், கீர்த்தி சுரேஷும் 13 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். அவர்களுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெரியவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். இந்த திருமணம் குறித்து கீர்த்தியோ, அவரின் பெற்றோரோ அறிவிப்பு வெளியிடும் வரை நம்ப முடியாது. ஏனென்றால், கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் என தகவல் வெளியாகியிருப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல.

ஒவ்வொரு முறையும் இப்படி திருமண தகவல் வெளியாகும்போது, எங்கள் மகளுக்கு திருமணம் இல்லை என கீர்த்தியின் பெற்றோர் விளக்கம் கொடுத்து கொடுத்தே டயர்டாகிவிட்டனர். நாங்களாக அறிவிப்பு வெளியிடும் வரை இந்த திருமண பேச்சை நம்பாதீர்கள். தயவு செய்து என் மகளை விட்டுவிடுங்கள் என கெஞ்சிக் கூட பார்த்துவிட்டார் கீர்த்தியின் அப்பா சுரேஷ். அப்படியும் இந்த திருமண வதந்தி அடங்கியபாடில்லை. கீர்த்தி சுரேஷ் ஜாலியாக படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட் செல்ல வேண்டும் என்கிற அவரின் ஆசையும் தற்போது நிறைவேறிவிட்டது.

கீர்த்தியை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்கிறார் இயக்குநர் அட்லி. வருண் தவானுடன் சேர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் பேபி ஜான் பாலிவுட் படத்தை தயாரித்து வருகிறார் அட்லி. நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தை தான் பேபி ஜான் என்கிற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

Read More : சென்னை வி.ஆர். மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! பொதுமக்கள் பீதி..!! பெரும் பரபரப்பு..!!

Advertisement