நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி.. மூளையில் அறுவை சிகிச்சை..!! என்ன ஆச்சு..?
நடிகர் பிரபுவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இன்றே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவரது மகன் பிரபு. இவரும் தமிழ் சினிமாவில் நடிகராகி அறிமுகமாகி கொடிக்கட்டி பறந்தார். 100க்கும் அதிகமான படங்களில் பிரபு நடித்து 80s காலத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் திகழ்ந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி பிறமொழி படங்களிலும் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
தொடக்கத்தில் ஹீரோவாக தனக்கென முத்திரை பதித்த நடிகர் பிரபு தற்போது குணசித்திர வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அட்மின் ஆன பிரபுவுக்கு, சிறுநீரகத்தில் கல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுநீரகத்தில் இருந்த கல் டாக்டர்கள் குழுவினரால் அகற்றப்பட்டுள்ளது. லேசர் வகையை சேர்ந்த அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகத்தில் இருந்த கல் அகற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகர் பிரவு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோயம்பேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபுவுக்கு, மூளையில் வீக்கம் இருப்பது தெரிய வந்தது. மூளையில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இன்றே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் கூறப்படுகிறது.
Read more ; உலகச் சந்தையின் வீழ்ச்சிக்கு மத்தியில் சமையல் எண்ணெய் விலை சரிவு..!!