முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பாஜகவில் இருந்து விலகிய நடிகை கெளதமிக்கு அதிமுக-வில் முக்கிய பொறுப்பு..!!

Actress Gauthami, who left the BJP, has been given an important role in the AIADMK, it has been reported.
03:37 PM Oct 21, 2024 IST | Mari Thangam
Advertisement

பாஜகவில் இருந்து விலகிய நடிகை கெளதமிக்கு அதிமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

பிரதமர் நரேந்திர மோடி மீது கொண்ட அதீத பற்றால் பாஜகவில் இணைந்து செயல்பட்டவர் நடிகை கெளதமி.. பாஜக சார்பில் நடைபெறும் அனைத்து பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு அக்கட்சிக்காக தீவிர பிரச்சாரம் செய்து வந்தார். இதனிடையே, கடந்த 2021 சட்டசபை தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார் கவுதமி. ஆனால், அங்கு அவர் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும், பாஜகவிலேயே அவர் தொடர்ந்து நீடித்து வந்தார்.

பின்னர், பாஜக நிர்வாகி ஒருவர் தனது நிலத்தை விற்று பண மோசடி செய்துவிட்டதாக அவர் புகார் தெரிவித்திருந்தார். ஆனால், பாஜக இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த ஆண்டு அக்கட்சியில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக அறிவித்தார் நடிகை கவுதமி. அதனைத்தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன்னர் அதிமுக-வில் இணைந்தார்.

இந்த நிலையில், பாஜகவில் இருந்து விலகிய நடிகை கெளதமிக்கு அதிமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், அதிமுக கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகை கௌதமியும், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராக தடா பெரியசாமியும் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் பாத்திமா அலி. அதிமுக கழக விவசாய பிரிவு துணைச் செயலாளர் சன்னியாசி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து சன்னியாசி இன்று முதல் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more ; இப்படி பேச சொன்னதே விஜய் சேதுபதி தான்? மீண்டும் வன்மத்தை கக்கும் அர்னவ்..!! – வறுத்தெடுத்த நெட்டிசன்கள் 

Tags :
Actress GauthamiAIADMKBJPஎடப்பாடி பழனிச்சாமி
Advertisement
Next Article