மாணவர்களை குறிவைக்கும் நடிகர் விஜய்..!! 2026இல் கப்பு அடிச்சிருவாரு போலயே..!!
நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய்யின் முழு டார்கெட் மாணவர்கள் தான். அவர்களின் வாக்குகளை கைப்பற்றவே அவர் முனைப்பு காட்டி வருகிறார்.
கடந்த ஜூன் மாதம் தனது பிறந்தநாளை ஒட்டி, தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் இருந்து தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண் எடுத்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளை நேரில் அழைத்து அவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். குறிப்பாக 12ஆம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு வைர நெக்லஸை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார் விஜய்.
இதையடுத்து, காமராஜரின் பிறந்தநாளன்று இரவு நேர பயிலகங்களை தொடங்கினார் விஜய். அதனைtஹ் தொடர்ந்து 234 தொகுதியிலும் தங்கள் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நூலகம் திறக்க உள்ளதாகவும் அறிவித்தனர். லியோ படத்தின் வெற்றி விழாவுக்கு பின்னர் அதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன. தாங்கள் அமைக்கவுள்ள நூலகங்களில் எந்தெந்த புத்தகங்கள் இடம்பெற வேண்டும் என்கிற பட்டியலும் வெளியாகியுள்ளது.
மேலும், தூய்மை பணியாளர்களை கொடியேற்ற வைப்பது, பழ வியாபாரிகளுக்கு நிழற்குடை அமைத்து கொடுப்பது என நாளுக்கு நாள் விஜய் மக்கள் இயக்கம் மக்களோடு நெருக்கம் காட்டி வருகிறது. அதன் ஒருபகுதியாக தான் 234 தொகுதிகளிலும் நூலகம் அமைக்கும் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. 2026இல் கப்பு முக்கியம் பிகிலு என கூறியிருக்கும் விஜய், இதுபோன்ற பொது சேவைகளால் தன்னை மக்களுடன் நெருக்கமாக்கி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.