கோலாகலமாக நடந்த நடிகை அமலாபாலின் சீமந்தம்!! -வைரலாகும் புகைப்படங்கள்!!
நீலத்தாமரா எனும் மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமலாபால். தமிழில் சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அமலாபாலுக்கு மைனா படம் மிகப்பெரிய ரிச் கொடுத்தது.
அதனைத்தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்த நடிகை அமலா பால், இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.
அதன் பின்னர் நடிகை அமலாபால் கடந்த வருடம் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது கர்ப்பமாக இருக்கும் அமலாபால் தனது கைகளில் Mom to be என மெஹந்தி போட்டுகொண்டு மிகவும் கியூட்டாக எடுத்துக்கொண்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற சீமந்த நிகழ்ச்சியில், எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரே வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.