BREAKING | நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது..!! தமிழ்நாடு அரசின் தீர்மானத்திற்கு வரவேற்பு..!! தவெக தலைவர் விஜய் அதிரடி..!!
10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று 2வது கட்டமாக கல்வி விருதுகள் வழங்குகிறார்.
இந்நிகழ்வில் பேசிய விஜய், கிராமப்புற, பட்டியலினத்தை சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்படுகின்றனர். நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது. ஒவ்வொரு மாநிலங்களுக்கு ஏற்றவாறு பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும். நீட் விலக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இதற்கு மாநில அரசு காலம் தாழ்த்தாமல் ஒப்புதல் வழங்க வேண்டும்.
மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு வேறு ஒரு முறையில் தேர்வு நடத்தினால் எப்படி..? மாநில கல்வியில் பயின்றுவிட்டு, தேசிய கல்வியில் தேர்வு எழுத சொல்வது அநீதி. நீட் தேர்வு குளறுபடியால் நம்பகத்தன்மை போய்விட்டது” என்றார்.