முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நினைத்ததை சாதித்த அமித் ஷா...! சட்டமானது 3 புதிய குற்றவியல் சட்ட மசோதா...! என்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது...?

06:10 AM Dec 26, 2023 IST | 1newsnationuser2
Advertisement

நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.

Advertisement

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா, கடந்த மக்களவையில் இந்திய குற்றவியல் (இரண்டாவது) சட்ட மசோதா, 2023, இந்திய குற்றவியல் நடைமுறை (இரண்டாவது) சட்ட மசோதா, 2023 மற்றும் இந்திய ஆதார (இரண்டாவது) சட்ட மசோதா, 2023 மீதான விவாதத்திற்கு பதிலளித்தார். விவாதத்திற்குப் பிறகு அவையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷ்ய ஆகிய மூன்று புதிய மசோதாக்கள் சட்டமானது.

சட்டம் பற்றி:

இந்திய அரசியலமைப்பு மற்றும் இந்திய மக்கள் தொடர்பான கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பழமையான குற்றவியல் நீதி முறையை நிர்வகிக்கும் மூன்று சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 1860 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் நோக்கம் நீதி வழங்குவது அல்ல, தண்டனை வழங்குவது. இப்போது பாரதிய நியாய சன்ஹிதா, 2023 இந்திய தண்டனைச் சட்டத்திற்கு (ஐபிசி) மாற்றாக இருக்கும் என்றும், பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு (சிஆர்பிசி) பதிலாக இருக்கும் என்றும், பாரதிய சாக்ஷய மசோதா இந்திய ஆதாரச் சட்டம், 1872 க்கு மாற்றாக இருக்கும்.

இந்த சட்டங்கள் இந்த அவையின் ஒப்புதலைப் பெற்ற பிறகு நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். இந்த மூன்று சட்டங்களும் நமது குற்றவியல் நீதி அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும். இந்த சட்டங்கள் தொடர்பாக மொத்தம் 3200 பரிந்துரைகள் பெறப்பட்டதாகவும், இந்த மூன்று சட்டங்களையும் பரிசீலிக்க 158 கூட்டங்களை மத்திய அரசு நடத்தி உள்ளது. மொத்தம் 484 பிரிவுகளைக் கொண்ட சிஆர்பிசிக்கு மாற்றாக இருக்கும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா இப்போது 531 பிரிவுகளைக் கொண்டிருக்கும்.

177 பிரிவுகள் மாற்றப்பட்டுள்ளன, 9 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன, 14 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐபிசிக்கு மாற்றாக இருக்கும் பாரதிய நியாய சன்ஹிதாவில் முந்தைய 511 பிரிவுகளுக்கு பதிலாக இப்போது 358 பிரிவுகள் இருக்கும். அதில் 21 புதிய குற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன, 41 குற்றங்களில் சிறைத்தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது, 82 குற்றங்களில் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது, 25 குற்றங்களில் கட்டாய குறைந்தபட்ச தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, 6 குற்றங்களில் தண்டனையாக சமூக சேவை விதிகள் உள்ளன, 19 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல், ஆதாரச் சட்டத்திற்கு மாற்றாக வரும் பாரதிய சாக்ஷயா மசோதாவில், முந்தைய 167 பிரிவுகளுக்குப் பதிலாக இப்போது 170 பிரிவுகள் இருக்கும், 24 பிரிவுகள் திருத்தப்பட்டுள்ளன, 2 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன, 6 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Tags :
Amit shacentral govtCriminal billpresident
Advertisement
Next Article