கழிவு நீரில் காபி போடும் உணவகம்!!சுற்றுச்சுழலை காக்க புதிய முயற்சி.. எங்கு தெரியுமா?
சுற்றுச்சுழலை காக்கும் புதிய முயற்சியாக பெல்ஜியத்தில் உள்ள உணவகத்தில், கழிவுநீரை மறுசுழற்சி செய்து குடிநீர் மற்றும் தேநீர் தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
நிலத்தடி நீரை மாசுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவை வீட்டு உபயோக மற்றும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆகியவையாகும். இந்த கழிவு நீர் விவசாய நிலங்களை அசுத்தப்படுத்துவதோடு, சுற்றுச்சுழல் சீர்கேட்டையும் ஏற்படுத்துகிறது. இந்தநிலையில் சுற்றுச்சுழலை காக்கும் நோக்கில் ஆங்காங்கே கழிவு நீரை மறுச்சுழற்சி செய்து குடிநீராக பயன்படுத்தபட்டு வருகிறது. உலகெங்கிலும் உள்ள பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தண்ணீரை மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
அந்தவகையில் பெல்ஜியத்தில் உள்ள உணவகம் ஒன்று கழிவு நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தி வருகிறது. பெல்ஜியத்தின் குர்னே நகராட்சியில் கஸ்டாக்ஸ் (Gust’eaux) உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 5 கட்ட நிலைகளில் கழிப்பறை தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் மற்றும் தேநீர் தயாாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும், கழிவு நீருடன் சேமித்து வைக்கப்படும் மழை நீரையும் கலந்து சுத்திகரிக்கப்பட்டு பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது சுற்றுச்சுழல் மாசடைவதை தடுக்கும் புதிய முயற்சியாக இருப்பதால், இதனை மக்கள் அதிகளவில் விரும்பி குடிக்கிறார்கள் என்று உணவக நிர்வாகி கூறியுள்ளார். இப்படி மறுசுழற்சி முறையில் சுத்திகரிக்கப்படும் இந்த நீரில், கூடுதல் பாதுகாப்பு கனிமங்கள் சேர்க்கப்படுவதால் சாதாரண தண்ணீரை விட சத்துக்கள் அதிகம் இருப்பதாக நீரியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
Read more | பிரேசில் வெள்ளம் | நிலச்சரிவில் சிக்கி இதுவரை 179 உயிரிழப்பு.. 33 பேர் மாயம்!!