முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'கரம் கொடுத்த கல்வி' நாங்குநேரியில் சாதிவெறி தாக்குதலுக்கு உள்ளான மாணவன், 12 ஆம் வகுப்பு தேர்வில் சாதனை!

02:04 PM May 06, 2024 IST | Mari Thangam
Advertisement

நாங்குநேரியில் சாதி வெறி தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னத்துரை 12ஆம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்துள்ளார்

Advertisement

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பள்ளி மாணவன் மற்றும் அவரது தங்கை சக மாணவர்களால் சாதிய வன்முறை காரணமாக அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டு நெல்லை அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். மேலும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று வெளியான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், சின்னத்துரை 469 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழில் 71, ஆங்கிலத்தில் 93, எக்கனாமிக்ஸ் 42, காமர்ஸ் 84, அக்கவுண்டன்சி 85, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் 94 என மொத்தம் 469 மதிப்பெண்களை அவர் பெற்றுள்ளார்.

இது குறித்து சின்னதுரை செய்தியாளர்களிடம் கூறுகையில், “சாதீய வன்கொடுமை காரணமாக பாதிக்கப்பட்டேன். 4 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். படிப்பதற்கு ஆசிரியர்கள் உதவி செய்தனர். அதன் பின்னர் பள்ளிக்குச் சென்று படித்தேன். அங்கேயும் நன்றாக படிக்க சொல்லி கொடுத்தனர். மாணவர்களும் உதவி செய்தனர். 469 மதிப்பெண்கள் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. வணிகவியல் (COMMERCE) படிப்பை முடித்துவிட்டு பட்டய கணக்கர் (C.A.) ஆக வேண்டும்” எனத் தெரிவித்தார்.  மாணவர் சின்னதுரையின் இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags :
12th Resultnanguneri
Advertisement
Next Article