முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அங்கீகாரம் பெற்ற கட்சி..!! சீமான், திருமாவளவனுக்கு TVK தலைவர் விஜய் வாழ்த்து..!!

Actor and Tamil Nadu Victory Kazhagam party leader Vijay has congratulated Vishika's Thirumavalavan and Nam Tamilar Party's Seeman for getting political recognition.
01:46 PM Jun 07, 2024 IST | Chella
Advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. இதில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 40 இடங்களை கைப்பற்றின. கூட்டணி இன்றி தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 35 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது. 12 மக்களவைத் தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேல் வாக்குகளை பெற்றுள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக மாறியுள்ளது.

Advertisement

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற 8% வாக்குகள் தேவை என்ற நிலையில், நாம் தமிழர் 8.19% வாக்குகளை பெற்றுள்ளதால், அக்கட்சி அங்கீகாரம் பெற்ற கட்சியாக உருவெடுத்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது நாம் தமிழர் கட்சி 6.58% வாக்குகள் பெற்றிருந்ததும், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியின் 'விவசாயி சின்னம்' பறிக்கப்பட்டு 'மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல், 2 எம்பிக்களை பெற்று 2 சதவிகிதத்திற்கு அதிக வாக்குகள் பெற்றுள்ளதால் விசிக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் அரசியல் அங்கீகாரம் பெற்றதற்கு விசிகவின் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்டோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Read More : நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இதை மட்டும் சாப்பிடுங்க போதும்..!! சூப்பர் டிப்ஸ் இதோ..!!

Tags :
SeemanTamilnaduthirumavalavantvk vijay
Advertisement
Next Article