வாஸ்து படி நீங்க தூங்கும் போது இந்த பொருட்கள் உங்க அருகில் வைக்க கூடாது..!!
நாம் தூங்கும் போது நம் வசதிக்காக நம் அறையில் பல பொருட்களை வைத்திருக்கிறோம். ஆனால் அது பல எதிர்மறை பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்தப் பழக்கங்கள் உங்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும் நினைவில் கொள்ளுங்கள் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள். இந்த பழக்கங்களில் பல உண்மையில் உங்களுக்கு நிதி பிரச்சினைகளையும், ஆரோக்கிய சிக்கல்களையும் ஏற்படுத்தும். இந்த பதிவில் வாஸ்து சாஸ்திர படி தூங்கும் போது பக்கத்தில் வைத்துக்கொள்ள கூடாத பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
எலக்ட்ரானிக் பொருட்கள்: மொபைல் போன் அல்லது வாட்ச் போன்ற எலெக்ட்ரானிக் பொருட்களை தலையணைக்கு அருகில் அல்லது அடியில் வைக்க கூடாது. இது அறிவியல் ரீதியாகவும் நமக்கு ஆபத்து அதே சமயம் இது பண இழப்புக்கு வழிவகுக்கும்.
கழுவப்படாத பாத்திரங்கள்: சில சமயங்களில், டீ அல்லது காபி டம்ப்ளரை நாம் படுக்கைக்கு அருகில், கழுவாமல் அப்படியே வைத்து விடுவோம். ஆனால் நாம் இப்படி கழுவப்படாத தலையணைக்கு அருகில் வைத்தால் அது வறுமைக்கு வழிவகுக்கும். அது மட்டும் இல்லாமல் தூங்கும் போது கெட்ட கனவுகளுக்கு வழிவகுக்கும்.
செய்தித்தாள்கள் அல்லது புத்தகங்கள்: சிலர் புத்தகங்களை வாசித்து விட்டு அப்படியே தலையணைக்கு அருகில் வைத்து விட்டு உறங்குவது உண்டு. ஆனால் இப்படி செய்தித்தாள்கள் அல்லது புத்தகங்கள் தொடர்பான எதை தலையணையின் கீழ் வைத்து உறங்கினாலும் அது வாழ்க்கையில் எதிர்மறை ஆற்றலின் விளைவை அதிகரிக்கிறது இதனால் அவர்களால் வாழ்க்கையில் முன்னேற முடியாது.
தங்கம்: பலர் தங்க நகைகளை தலையணையின் கீழ், தூங்குவதற்கு முன் கலட்டி வைப்பது உண்டு. இதனால் உங்களுக்கு அதிக கோபத்தை ஏற்படுத்தி, உறவுகள் கசப்பாக மாறலாம்.
கண்ணாடி: பெரும்பாலும் அநேகர் தங்களின் கண்ணாடியை தலைக்கு அருகில் வைத்து தூங்குவது உண்டு. அப்படி செய்தால் அது திருமண வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தும்.
தண்ணீர் பாட்டில்கள்: பொதுவாக பலர் தண்ணீர் பாட்டில்களை தங்களின் தலைக்கு அருகில் வைத்து உறங்குவது உண்டு. ஆனால், வாஸ்து சாஸ்திரத்தின் படி, தலைக்கு கீழ் தண்ணீர் இருந்தால் சந்திரன் பாதிக்கப்படுகிறார். இதனால் எதிர்மறை அல்லது மனநல பிரச்சனைகள் ஏற்படும்.