முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழக அரசு அறிவித்துள்ள 3 சதவீத அகவிலைப்படி உயர்வு யார் யாருக்கு பொருந்தும்?

According to the 3 percent discount announced by the Tamil Nadu government, we can see in this post who is eligible for the increase
01:28 PM Oct 20, 2024 IST | Mari Thangam
Advertisement

மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி 3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்படும் என்றும் இந்த அகவிலைப்படி கடந்த ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார். இதன்மூலம் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Advertisement

இந்நிலையில் தற்போது அகவிலைப்படி உயர்வு யார் யாருக்கு எல்லாம் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறியதாவது, "கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகையை, தற்போது நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறை மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்பட வேண்டும்.

இந்த திருத்தப்பட்ட அகவிலைப்படி, தற்போது அகவிலைப்படியை பெறும் முழு நேர பணியாளர்களுக்கும். சில்லரைச் செலவு நிதியிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர ஊதியம் பெறும் முழு நேர அலுவலர்களுக்கும் அனுமதிக்கத்தக்கதாகும். பகுதி நேர பணியாளர்களுக்கு அனுமதிக்கத்தக்கதல்ல. அதன்படி, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள், பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு சம்பள வீதங்களின் கீழ்வரும் அலுவலர்கள்,

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல்தொழில்நுட்பப் பயிற்சிப் பள்ளிகள், சிறப்பு பட்டயப் படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், உடற்பயிற்சி இயக்குனர்கள், நூலகர்கள், ஊதிய அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பு காலமுறை ஊதிய நிலைகளில் ஊதியம் பெறும் வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், குழந்தைகள் நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரியும் ஊராட்சிச் செயலாளர்கள் எழுத்தர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கும் பொருந்தும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read more ; நடிகை ரம்யா கிருஷ்ணன் உடன் விவாகரத்தா? கணவர் வம்சி பகிர்ந்த தகவல்.. ஷாக் ஆன ரசிகர்கள்..!

Tags :
govt employeesmk stalintn government
Advertisement
Next Article