கருட புராணத்தின் படி, இந்த 5 தவறுகள் உங்கள் ஆயுளை குறைக்கும்..!!
கருட புராணம் இந்து மதத்தின் மிக முக்கியமான நூல்களில் ஒன்று. இந்த கருட புராணத்தில் மனிதர்களின் வாழ்க்கை, இறப்பு, அடுத்த பயணம் அதாவது.. இறப்புக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை விளக்கியுள்ளனர். மேலும் மனிதன் செய்யும் பல்வேறு கர்மாக்களுக்கு வெவ்வேறு தண்டனைகளையும் விளக்கியுள்ளனர். அந்த வகையில் மனிதர்கள் எப்படி தங்களின் ஆயுளைத் தாங்களே எப்படி குறைத்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
குறிப்பிட்ட நாளில் உடலுறவு கொள்வது : கருட புராணம் குறிப்பிட்ட நாட்களில் உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்று எச்சரித்துள்ளது. கிருஷ்ணா மற்றும் சுக்லா பக்ஷாவின் சதுர்தசி, ஒவ்வொரு மாதத்தின் அஷ்டமி, அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களில் உறவு வைத்துக்கொள்வது பாவத்தின் உச்சமாகும்.
பழைய இறைச்சியை உண்பது : பழைய இறைச்சியை ஒருபோதும் சாப்பிட வேண்டாம். இது பல நோய்களின் தாயகமாகும். இத்தகைய பழுதடைந்த, அழுகிய இறைச்சியை உண்பது பாவத்தின் உச்சமாகும்.
இரவில் தயிர் சாப்பிடுவது : இரவில் தயிர் சாப்பிடுவது பல நோய்களை வரவழைக்கிறது. பொதுவாக மக்களுக்கு அதனால் ஏற்படும் பாதிப்புகளின் தீவிரம் புரியாது. அதேசமயம், இரவில் தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் சளி கோளாறுகள் நீண்ட நாள் நோய்களைத் தரும்.
இருட்டில் தூங்குவது : இருளில் ஒருபோதும் தூங்கக்கூடாது. நீங்கள் படுக்கையில் படுத்த பிறகுதான் விளக்குகளை அணைக்க வேண்டும். உடைந்த கட்டிலில் படுப்பது மரணத்திற்கான அறிகுறியாகும்.
அழுக்கு கைகளுடன் எழுதுவது : கைகளை சுத்தம் செய்யாமல் படிப்பது, எழுதுவது அல்லது பாடம் நடத்துவது போன்றவை உங்களின் ஆயுளை குறைக்கும்.
Read more ; நாடு முழுவதும் 25,000-க்கும் மேற்பட்ட புதிய BSNL 4 ஜி தளங்கள் இணைப்பு…! மத்திய அரசு தகவல்