For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இவர்கள் எல்லாம் காதுகளை சுத்தம் செய்யவே வேண்டாம்.. மருத்துவர் அளித்த தகவல்..

according to ENT doctors these people dont want to clean their ears
07:03 AM Jan 02, 2025 IST | Saranya
இவர்கள் எல்லாம் காதுகளை சுத்தம் செய்யவே வேண்டாம்   மருத்துவர் அளித்த தகவல்
Advertisement

பொதுவாக நாம் காதில் அழுக்கு இருந்தால், உடனடியாக விரல்களை வைத்து எடுத்து விடுவோம். இன்னு சிலர், ஹேர்பின், ஊக்கு, பட்ஸ் அல்லது துண்டு வைத்து காதை சுத்தம் செய்து விடுவோம். ஒரு சிலர் டாக்டர் பரிந்துரைக்காமல் காதில் சொட்டு மருந்து ஊற்றி,, காதை சுத்தம் செய்வது உண்டு. ஆனால் அது முற்றிலும் தவறு என்கிறார்கள் இ.என்.டி மருத்துவர்கள். ஆம், இ.என்.டி மருத்துவர்கள், நமது காதை பரிசோதித்த பிறகு தா, அதற்கேற்ப சொட்டு மருந்தைப் கொடுப்பார்கள். அப்படி மருத்துவர் பரிந்துரைக்கு மருந்தாக இருந்தாலும், நாமாகவே அந்த மருந்தை பயன்படுத்தக்கூடாது.

Advertisement

ஏனென்றால், காது தம்மைத்தாமே சுத்தப்படுத்திக் கொள்ளும் தன்மை கொண்டவை. இதநால் நாம் ஊற்றும் சொட்டு மருந்து, காதுகளைச் சுத்தப்படுத்தாது. அந்த மருந்துகள் காதில் இருக்கும் அழுக்கை மென்மையாக்கி விடும், இதனால் உள்ளே இருக்கும் அழுக்கு சுலபமாக வெளியே வந்து விடும். ஒரு சிலருக்கு அழுக்கு தானாக வெளியே வராத பட்சத்தில், மருத்துவரை அணுகி வாக்ஸ் த்ரோப் எனப்படும் கருவியைக் கொண்டு அழுக்கை அகற்ற வேண்டும். ஒரு சிலருக்கு மயக்க மருந்து கொடுத்துகூட மருத்துவர்கள் காதில் இருக்கும் அழுக்கை அகற்றுவார்கள்.

அந்த வகையில், எல்லோரும் மருத்துவர்களிடம் சென்று காதுகளைச் சுத்தப்படுத்த தேவையில்லை. காதில் உள்ள அழுக்கு வெளியேற முடியாமல், ஒவ்வொருவிதமான அறிகுறிகள் ஏற்படும். உதாரணமாக பூச்சி பறப்பது போன்ற உணர்வு இருக்கும், தலைவலி ஏற்படும், காத்து வலி, காதுகளை அடைத்துக்கொண்ட உணர்வு ஏற்படும். அப்போது, நீங்கள் இ.என்.டி மருத்துவரிடம் சென்று காதை சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.

Read more: திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லையா? இனி கவலை வேண்டாம், கட்டாயம் இந்த பழத்தை சாப்பிடுங்க..

Tags :
Advertisement