ஆவின் நிறுவனத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? தேர்வு கிடையாது..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலி பணியிடங்கள் மாவட்ட வாரியாக நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி, மதுரை ஆவின் நிறுவனத்தில் காலியாகவுள்ள Sales And Marketing Executive பிரிவில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வித்தகுதி :
ஏதாவது ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். UG/PG எதாவது ஒன்றை முடித்திருக்க வேண்டும். குறிப்பாக, Buisness Administration பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும், Digital Marketing/Marketing Software/Sales பிரிவில் படித்ததிற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். FMGG அல்லது Dairy industry துறையில் Marketing/Sales பிரிவில் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஓட்டுநர் உரிமம் :
மேற்கண்ட பணிக்கு மொழி திறன் இருக்க வேண்டும். Interpersonal Skills இருக்க வேண்டும். மார்க்கெட்டிக் Software, Analytics Skills இருக்க வேண்டும். மேலும், ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
சம்பளம் :
இந்த பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.15,000 வழங்கப்படும். மேலும், Insentive வழங்கப்பட உள்ளது. அதேபோல், Travel Allowance-ஆக ரூ.3,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
கல்வித்தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்காணல் தேதி :
ஜனவரி 20ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கல்வித்தகுதி சான்றிதழ், பணி அனுபவ நகலை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்.
Madurai Aavin Campus (Admin Block) பகுதியில் நேர்காணல் நடைபெற உள்ளது. ஜனவரி 20ஆம் தேதி காலை 11 மணிக்கு நேர்காணல் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 94896 19001-04 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Read More : இனி விவகாரத்து செய்தால் கணவன் – மனைவி இருவருக்குமே தண்டனை..!! அதிரடி உத்தரவு போட்ட வடகொரியா..!!