முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கன்னியாகுமரி: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பல லட்ச ரூபாய் மோசடி..!! குற்றவாளிகள் தலை மறைவு.!

03:00 PM Feb 03, 2024 IST | 1newsnationuser4
Advertisement

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பொழப்பேரிடம் ஐந்து லட்ச ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள 'ஐ.பி எம்.எஸ்' என்ற நிறுவனம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி விளம்பரம் செய்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் ஜெபின் உட்பட ஏராளமானோர் சவுதி அரேபியா கத்தார் சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு செல்வதற்காக இந்த நிறுவனத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்புவதாக உறுதியளித்த நிறுவனம் அவர்களிடமிருந்து 5,89,000/- ரூபாய் பணம் பெற்றிருக்கிறது. பணத்தை வாங்கிய பின் வேலைக்கு அனுப்பாமல் தொடர்ந்து காலதாமதம் செய்து வந்துள்ளனர். இதனையடுத்து வெளிநாட்டு வேலை என்ற பெயரில் தங்களிடம் மோசடி நடந்திருப்பதை பணம் கொடுத்தவர்கள் உணர்ந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் ஜான் ஜெபின் மணிகண்டன் நாகராஜ் கோகுல் உள்ளிட்டோர் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் எஸ்.பி உத்தரவின் பேரில் ஐ.பி எம்.எஸ்' நிறுவனத்தை நடத்தி வந்த மணிகண்டன் மற்றும் அவரது மனைவி தீபா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள அவர்களை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.

Tags :
abroad jobAbscondKanniyakumarimoneyScam
Advertisement
Next Article