கவனம்...! இது போன்ற SPAM கால் வந்தால் உடனே இந்த உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும்...!
மொபைல் எண்களுக்கு போலியாக வரும் அழைப்புகள் தொடர்பாக சைபர் கிரைம் உதவி எண் 1930 புகார் அளிக்க வேண்டும்.
ஒருமாத பில்லிங்கில் மின்கட்டணம் போன்ற சேவைகளுக்காக செலுத்தும் கட்டணம் ரூ.50,000-க்கும் மேல் இருந்தால் கூடுதலாக 1% கட்டணம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கப்படும் இந்தியன் வங்கியின் சிறப்பு நிரந்தர வைப்பு நிதியில் முதலீடு செய்வதற்கு கடைசிநாள் நவம்பர் 30 என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எஸ்பிஐ கார்டில் ரிவார்டு புள்ளிகளின் செல்லுபடியாகும் காலம் மாற்றப்பட்டுள்ளது. இனிமேல் அவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்
கிரெடிட் கார்டு மூலம் EMI உடன் கொள்முதல் செய்கிறீர்கள் என்றால், இனிமேல் கூடுதல் கட்டணங்கள் இருக்கும் உள்ளிட்ட விதிகள் மாற்றப்பட்டுள்ளது. இந்த விதிகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதேபோல், வங்கிகள் மட்டுமின்றி ரயில்வே துறையிலும் முன்பதிவு செய்வதற்கான காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தொலைத்தொடர்பு விதிகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது.இது நவம்பர் 1, 2024 முதல் அமலுக்கு வந்தது . இந்த புதிய விதியின்படி அனைத்து டெலிகாம் ஆபரேட்டர்களும் மொபைல் போன்களில் பெறப்படும் செய்திகளைக் கண்காணிப்பதை மேம்படுத்தும் வகையில் செய்திகளைக் கண்டறியும் திறனை (Message Traceability) செயல்படுத்த வேண்டும். இது பயனர்களுக்கு விளம்பரச் செய்திகள் மற்றும் அழைப்புகளை அடையாளம் காண உதவும், மோசடி அபாயத்தைக் குறைக்கும்.
இதுபோன்ற அழைப்புகளுக்கு, சஞ்சார் சாத்தி (www.sancharsaasthi,gov.in) என்ற இணையதளத்தில் சந்தேகத்திற்குரிய மோசடி தகவல்தொடர்புகளைப் புகாரளிப்பதன் மூலம் உதவலாம். ஏற்கனவே பணத்தை இழந்தவர்கள் அல்லது இணைய வழி குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இது குறித்து சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது https://www.cybercrime.gov.in இணையதளத்தில் புகாரளிக்கவும்.