For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இங்கிலாந்தை அலறவிட்ட அபிஷேக் சர்மாவின் சரவெடி!. 13 ஓவரிலேயே மாஸ் வெற்றிபெற்ற இந்திய அணி!.

Abhishek Sharma's brilliant knock left England reeling! India won by a huge margin in just 13 overs!
05:33 AM Jan 23, 2025 IST | Kokila
இங்கிலாந்தை அலறவிட்ட அபிஷேக் சர்மாவின் சரவெடி   13 ஓவரிலேயே மாஸ் வெற்றிபெற்ற இந்திய அணி
Advertisement

IND vs ENG: அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் 'டி-20' போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதிய முதல் போட்டி கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் வீரர்கள் பில் சால்ட் (0), டக்கெட்டை (4) 'டக்' அவுட்டாக்கினார் அர்ஷ்தீப். போட்டியின் 8வது ஓவரை வீசினார் வருண் சக்ரவர்த்தி. இதன் 3, 5வது பந்தில் ஹாரி புரூக் (17), லிவிங்ஸ்டனை (0) அவுட்டாக்கினார் வருண். கேப்டனுக்கு உரிய பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர், 34 வது பந்தில் அரைசதம் எட்டினார். இவர், 68 ரன்னில் அவுட்டானார். இங்கிலாந்து அணி 20 ஓவரில் 132 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட் சாய்த்தார்.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஜோடி நிதானத்தை கடைபிடித்தனர். இருப்பினும், 5வது ஓவரில் ஆர்ச்சர் வீசிய 2வது பந்தில் சாம்சன் (26) அவுட்டானார். 5வது பந்தில் சூர்யகுமாரை 'டக்' அவுட்டாக்கினார். இதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து மார்க் உட் வீசிய 6வது ஓவரில் மிரட்டிய அபிஷேக், 2 சிக்சர், 1 பவுண்டரி அடித்தார். அபிஷேக், 20 பந்தில் அரைசதம் கடந்தார். இவர், 79 ரன்னில் அவுட்டானர். கடைசியில் திலக் ஒரு பவுண்டரி அடிக்க, இந்திய அணி 12.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 133 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 'டி-20' தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

Readmore: ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா…? 25-ம் தேதி காலை 10.30 மணி முதல் சிறப்பு முகாம்…!

Tags :
Advertisement