For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

“என்னால் எனது கணவருக்கு சங்கடம் தான்” வைரலாகும் கீர்த்தி சுரேஷின் பேட்டி..

keerthy suresh's interview about her husband is going viral
07:56 PM Jan 24, 2025 IST | Saranya
“என்னால் எனது கணவருக்கு சங்கடம் தான்” வைரலாகும் கீர்த்தி சுரேஷின் பேட்டி
Advertisement

தமிழ் திரை உலகில் பல ரசிகர்களை கொண்ட நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பை சிலர் கேலி செய்தாலும், இவரது நடிப்பை ரசிக்கும் ரசிகர்களும் பலர் உள்ளனர். முன்னாள் நடிகை மேனகா சுரேஷின் மகளான கீர்த்தி சுரேஷ், தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தன் நடிப்பிற்காக பல்வேறு விருதுகளை வென்றவர் தான் கீர்த்தி சுரேஷ். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் கதையை வைத்து எழுதப்பட்ட மகாநதி திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது. ஆனால் கீர்த்திக்கு முதலில் திரைப்படத்துறையில் ஆர்வம் இல்லை.

Advertisement

பேஷன் டிசைனிங்கில் தான் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. பேஷன் டிசைனிங்கில் பட்டப்படிப்பைப் பெற்ற இவர், லண்டனில் 2 மாத பயிற்சி பெற்றார். இந்நிலையில், கடந்த 15 வருடங்களாக அந்தோணி தட்டில் என்பவரை காதலித்து வந்த இவர், தனது காதலை ரகசியமாக வைத்திருந்தார். இதையடுத்து, அவர் கடந்த டிசம்பர் மாதம் தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்.

அவருடைய திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்புதான் அவர் தனது காதலரை சமூக வலைதள பக்கத்தில் அறிமுகப்படுத்தியிருந்தார். மேலும், கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்டது பெரிய அளவில் பேசப்பட்டது.

தற்போது, அவர் அளித்த பேட்டி ஒன்று பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் அவர் கூறும் போது, என்னை திருமணம் செய்து கொண்டதுதான் ஆண்டனிக்கு சங்கடமாக உள்ளது என்று கூறியுள்ளார். பேட்டியின் போது, திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, திருமணத்திற்கு பிறகு என்னுடைய வாழ்க்கை மாறவில்லை, எல்லாமே முன்னாடி இருந்தது போல தான் இருக்கிறது. ஆனால் எங்கே சென்றாலும் புகைப்படங்கள் எடுக்கிறார்கள். நிறைய அட்டென்ஷன் கிடைக்கிறது. இது எனக்கு பழகிவிட்டது. ஆனால் என் கணவருக்கு இது பழக்கம் இல்லாததால், அவருக்கு சங்கடமாக இருக்கிறது. ஆனாலும் இது குறித்து அவர் எதுவும் சொல்லாமல், எனக்காக ஏற்றுக்கொள்கிறார்.

எனது கணவர் எனக்காக போஸ் கொடுக்கிறார். மீடியா முன்பு வர கூச்ச பட்டாலும் என்னுடைய கேரியருக்கு அது மிகவும் முக்கியமானது என்று அவர் புரிந்து நடக்கிறார் என கீர்த்தி கூறியுள்ளார். காதலித்துக் கொண்டிருக்கும் போது, உனது கனவு ஆசையை நீ எப்போதும் தொடரலாம் என்று அந்தோணி மிகவும் சப்போர்ட்டாக இருந்துள்ளார். அது மட்டும் இல்லாமல், கீர்த்தி சுரேஷ் பற்றி பல வதந்திகள் வந்த போதும் அவர் கீர்த்தி சுரேஷ்க்கு சப்போர்ட்டாகத்தான் இருந்தாராம். இதனால் தான் தனக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அதை நான் கண்டுக்கொள்ள மாட்டேன் என்று கீர்த்தி சுரேஷ் பேட்டிஅளித்துள்ளார்.

Read more: “ஒழுங்கா ட்ரெஸ் இல்லாம வீடியோ கால் பண்ணு” சிறுமியை மிரட்டிய நபர்; பெண்களுக்கு போலீஸ் விடுத்த எச்சரிக்கை!!!

Tags :
Advertisement