அதிர்ச்சி..! ஆன்லைன் மூலம் பணம்... 2025 ஜனவரி 1-ம் தேதி முதல்... ஆவின் நிறுவனம் போட்ட உத்தரவு...!
2025 ஜனவரி 1-ம் தேதி முதல் இணையவழி மூலம் பணம் செலுத்தும் நபர்களுக்கு மட்டுமே ஆவின் பால், பால் உபபொருட்கள் வழங்கப்படும் என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரும் 2025 ஜனவரி 1ம் தேதி முதல் பால் முகவர்களும், பொதுமக்களும் ஆவினில் ரொக்க பணபரிவர்த்தனை செய்து பால், பால் பொருட்களை வாங்கிட அனுமதியில்லை எனவும், இணையவழி மூலம் பணம் செலுத்துவோருக்கு மட்டுமே ஆவின் பால், பால் உபபொருட்கள் வழங்கப்படும், மாதாந்திர அட்டை மூலம் பால் விநியோகம் செய்யப்படும் என கோவை மாவட்ட ஆவின் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வாய்ப்பினை அனைத்து ஆவின் நுகர்வோர்களும் பயன்படுத்தி (UPI Payment/Debit/Credit Card/Net Banking) மூலமாக பணம் செலுத்தி சலுகை விலையில் மாதாந்திர பால் அட்டையை 01.01.2025 முதல் ஆவின் ஆர்.எஸ்.புரம் விற்பனை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும். முகவர் உரிமத்தினை ஆவின் நிர்வாகம் நிர்ணயம் செய்த ரூ.5000.00 காப்புத் தொகையை செலுத்தி முகவர் உரிமத்தினை 31.12.2024க்குள் புதுப்பித்துக் கொள்ளும்படியும் தேவைப் பட்டியலுக்கான தொகையை ரொக்கமாக செலுத்துவதை பால் முகவர்கள் 01.01.2025 முதல் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இணையவழி மூலம் பணபரிவர்த்தனை செய்யும் பால் முகவர்களுக்கு மட்டுமே ஆவின் பால் விநியோகம் செய்யப்படும் என்பது கட்டாயமாக்கப்பட்டால் பால் முகவர்கள் ஆவின் பால் விற்பனையால் இன்னும் கடும் பொருளாதார இழப்பை சந்தித்து பால் விநியோகத் தொழிலை விட்டே ஒதுங்கும் நிலைக்கு தள்ளப்படுவர். மேலும் ஆவின் பால் விநியோகம், விற்பனையை படிப்படியாக குறைத்துக் கொண்டு தனியார் பால் நிறுவனங்களின் பால் விற்பனைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலை உருவாகும் என பலர் தங்களது எதிர்ப்பு பொருளை தெரிவித்து வருகின்றனர்.