ஹரியானா தோல்வி.. டெல்லி தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி கிடையாது..!! - ஆம் ஆத்மி முடிவு
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. ஹரியானாவில் பாஜகவை வீழ்த்த முடியாமல் 3-வது முறையாக தோல்வியைத் தழுவி இருக்கிறது காங்கிரஸ். இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைப்பதை ஆம் ஆத்மி நிராகரித்துள்ளதக அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
ஹரியானாவில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், ஆம் ஆத்மியின் தலைமை செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர், காங்கிரஸ் கட்சியின் அதிக நம்பிக்கையை அதன் தோல்விக்கு காரணம் என குற்றம் சாட்டினார். டெல்லியில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணி இருக்காது. மக்களவைத் தேர்தலின் போது உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லியில் அதிக இடங்கள் வழங்கப்பட்ட போதிலும் ஹரியானாவில் சமாஜ்வாதி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு காங்கிரஸ் இடமளிக்கவில்லை" என்று தெரிவித்தார்.
ஹரியானாவில் 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பரவலாகக் கணிக்கப்பட்டுள்ள காங்கிரஸ், எக்சிட் போல் மூலம் 37 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. பாஜக 48 இடங்களைக் கைப்பற்றியது. ஹரியானாவில் மொத்தமுள்ள 90 இடங்களில் 88 இடங்களில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, தனித்துச் செல்ல முடிவெடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
Read more ; மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பண மழை கொட்டப் போகுது..!! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மெகா பிளான்..!!