For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நோட்..! 5 முதல் 10 வயது வரை வங்கி கணக்கு தொடங்க ஆதார் எண் கட்டாயம்...!

Aadhaar number is mandatory for opening a bank account between the ages of 5 and 10
06:30 AM Jun 18, 2024 IST | Vignesh
நோட்    5 முதல் 10 வயது வரை வங்கி கணக்கு தொடங்க ஆதார் எண் கட்டாயம்
Advertisement

5 முதல் 10 வயது வரையிலான மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் எண் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

5 முதல் 10 வயது வரையிலான மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் எண் கட்டாயம் தேவை. இவர்களுக்கு கணக்கு தொடங்கும் போது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயர் இணைக் கணக்காக தொடங்கப்படும். இதனை இருவரும் இணைந்து பராமரிக்க முடியும். ஜீரோ பேலன்ஸ் கணக்காக தொடங்கப்படும். ஏற்கனவே ஆதார் அட்டை எடுத்திருந்தால் 5 வயது பூர்த்தியானதும் பயோமெட்ரிக் தகவல்களை புதுப்பிக்க வேண்டும்.

10 வயதுக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு புதிய வங்கி கணக்கு தொடங்க ஆதார் அட்டை, மாணவனின் அடையாள அட்டை, பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவை தயாராக வைத்திருக்க வேண்டும். மேலும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் விவரங்கள், தொலைபேசி எண் ஆகியவையும் வேண்டும். இதுதொடர்பான படிவத்தில் உரிய விவரங்களை நிரப்பி பள்ளிக்கு அருகிலுள்ள அஞ்சல் அலுவலகம் மற்றும் வங்கிகளின் விவரங்களை இணைக்க வேண்டும். குறிப்பாக வங்கி கணக்குகளின் தகவல்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Tags :
Advertisement