ஆதார் எண்ணால் புதிய ஆபத்து..!! பணம் பறிபோகும் அபாயம்..!! உடனே லாக் பண்ணுங்க..!!
தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடி என்பது அதிகரித்துள்ளது. இதுகுறித்த பல விழிப்புணர்வுகளை அரசு சார்பிலும் பிறர் சார்பிலும் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் கூட, குற்றங்கள் குறைந்தபாடில்லை. இதற்கு காரணம், இவ்வகையான மோசடிகள் ஒரே விதத்தில் நிகழாமல் வித விதமான யுக்திகள் மூலம் கையாளப்பட்டு நடத்தப்படுகிறது.
இந்நிலையில், ஆதார் மூலம் தற்போது வங்கிக் கணக்கில் பணம் திருடு போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. AEPS (adhaar enabled payment System ) என்னும் முறை மூலம் உங்களுடைய ஆதார் எண், வங்கியின் பெயர் மற்றும் உங்களுடைய பயோ மெட்ரிக்-ஐ பயன்படுத்தி ஓடிபி இல்லாமல் கூட பணப்பரிமாற்றம் செய்ய முடியும். இந்நிலையில், நாம் பொதுவாக சிம்கார்டு வாங்க சென்றாலே அதற்கு ஆதார் எண்ணும் நமது கைரேகையையும் நாம் பயன்படுத்த கூடிடும்.
சிலர் அதை திருடி பணம் பறிபோக வாய்ப்புள்ளது. இந்த வகையான மோசடிகளில் இருந்து தப்பிக்க உங்களது மொபைலில் எம் ஆதார் (M aadhar) என்ற செயலியை இன்ஸ்டால் செய்து அதில், உங்கள் ஆதார் தகவல்களை அளித்து பின் பயோமெட்ரிக் லாக் என்ற ஆப்ஷனை ஆக்டிவேட் செய்தால், இதில் இருந்து தப்பித்து விடலாம்.