For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Court: இனி ஆதார் முக்கியமில்லை!… முக்கிய சேவைகள் அனைத்திற்கும் ஒரே ஆவணம் இந்த சான்றிதழ்தான்!… நீதிமன்றம் அதிரடி!

07:37 AM Mar 19, 2024 IST | 1newsnationuser3
court  இனி ஆதார் முக்கியமில்லை … முக்கிய சேவைகள் அனைத்திற்கும் ஒரே ஆவணம் இந்த சான்றிதழ்தான் … நீதிமன்றம் அதிரடி
Advertisement

Court: ஓய்வூதிய தொகையை பெற ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதி முக்கியமில்லை என்று குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

வருங்கால வைப்பு நிதி அமைப்பானது கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி ஆதார் அட்டைகளுக்கான சுற்றறிக்கை எண்: WSU/2024/1/UIDAI மேட்டர்/4090ஐ வெளியிட்டது. இதன் படி, PF பணத்தை பெற பிறந்த தேதிக்கான சரியான ஆவணமாக ஆதார் அட்டை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இதற்கு வருங்கால வைப்பு நிதி ஆணையரும் ஒப்புதல் வழங்கியுள்ளார். EPFO ஆணையத்தின் இந்த விதிமுறையானது, குஜராத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் தீர்ப்பின் படி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது மனுதாரர் 1984ம் ஆண்டு முதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய மார்ச் 31, 2021 அன்று ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற பிறகும் அவருக்கான ஓய்வூதிய தொகை செலுத்தப்படாமல் இருந்தது.

இது குறித்து அவர் பணியாற்றிய நிறுவனத்திடம் கேட்ட போது பதிவேடுகளின் படி அவரது பிறந்த தேதி அவரது ஆதார் அட்டையில் உள்ள தேதியுடன் பொருந்தாததால் ஓய்வூதியத்தை செலுத்த முடியவில்லை என கூறினார்கள். எனவே ஓய்வூதியம் வேண்டி, மனுதாரர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கானது நீதிபதி மௌனா எம் பட் தலைமையில் விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கின் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின் மனுதாரரின் பள்ளி விடுப்பு சான்றிதழிலும், அலுவலக பதிவேடுகளிலும் பிறந்த தேதி ஒரே மாதிரியாக இருப்பதால் அவரது ஓய்வூதிய தொகையை இரண்டு வாரங்களுக்குள் நிறுவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் ஆண்டுக்கு 6% வட்டி விதித்து வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கினார். மேலும் அவர் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் 2023 ஆம் ஆண்டின் சுற்றறிக்கை எண்.08 படி, ஆதார் அட்டையானது பிறந்த தேதிக்கான அடையாள சான்றாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் கூறினார்.

Tags :
Advertisement