For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’இனி ஆதார் அட்டையை ஆவணமாக ஏற்றுக் கொள்ள முடியாது’..!! EPFO அதிரடி அறிவிப்பு..!!

08:22 AM Jan 18, 2024 IST | 1newsnationuser6
’இனி ஆதார் அட்டையை ஆவணமாக ஏற்றுக் கொள்ள முடியாது’     epfo அதிரடி அறிவிப்பு
Advertisement

நாம் ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்கும் தொகையில், குறிப்பிட்ட தொகை நமது பிஎப் கணக்கிற்கு செல்லும். நிறுவனத்திடம் இருந்தும், நம்மிடம் இருந்தும் குறிப்பிட்ட தொகை இப்படி மாதந்தோறும் நமது பிஎப் கணக்கில் சேரும். இபிஎப்ஓ பக்கத்தில் இருக்கும் பாஸ்புக் தளத்தில் நம்முடைய பிஎப் கணக்கை குறிப்பிட்டு நாம் நம்முடைய தொகை இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும். இந்த பிஎப் கணக்கில் சேரும் பணத்திற்கு வட்டியும் வழங்கப்படும்.

Advertisement

தேவைப்படும் பட்சத்தில் இடைப்பட்ட நேரத்தில் கூட இந்த இந்த தொகையை எடுத்துக்கொள்ள முடியும். அவசர தேவைகள், மருத்துவ தேவைகளுக்கு இந்த பணத்தை எடுத்துக்கொள்ளலாம். பிஎப் போக ரிட்டயர்மெண்ட் தொகையும் இதேபோல் வழங்கப்படும். ஆனால், அதை குறிப்பிட்ட வயதிற்கே பின்பே எடுக்க முடியும். இந்நிலையில்தான், அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான வாய்ப்புகளை மத்திய அரசு ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

அதன்படி, அதிக ஓய்வூதியம் பெற 1995-ன் (EPS-1995) கீழ், தகுதியான ஓய்வூதியம் பெறுவோர் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக ஓய்வூதியத்தைப் பெற 1995-ன் (EPS-1995) கீழ் உள்ள லிஸ்டில் வருபவர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும். முன்பு இதற்கான கடைசி தேதி மார்ச் 3ஆம் தேதி வரை இருந்தது. ஆனால், மக்கள் பலர்.. நாங்களும் அதிக ஓய்வூதியம் பெற விரும்புகிறோம். ஆனால் தேதி முடிந்துவிட்டது. எனவே தேதியை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று கடைசி தேதியை மே 3, 2023க்கு மத்திய அரசு மாற்றியுள்ளது.

இந்நிலையில்தான் இனி ஆதார் அட்டையை பிறப்பு சான்றிதழ் ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று இபிஎப்ஓ அறிவித்துள்ளது. அதன்படி, இனி பிறப்பு ஆவணங்களுக்கு ஆதார் அட்டையை கொடுக்கக் கூடாது. அதை கொடுத்துள்ளவர்கள் உடனே பிறப்பு சான்றிதழை வழங்க வேண்டும். பிறப்பு சான்றிதழ் மட்டுமே பிறப்பு சான்றாக ஏற்றுக்கொள்ள முடியும் என்று அறிவித்துள்ளது.

Tags :
Advertisement