”வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு”..!! ”இந்த வங்கிக்கு இனி போகாதீங்க”..!! உரிமத்தை அதிரடியாக ரத்து செய்தது ரிசர்வ் வங்கி..!!
கர்நாடகாவைச் சேர்ந்த சிம்ஷா சககார வங்கி நியாமிதா, மத்தூர் நிதி நிலைமை மோசமடைந்து வருவதால், அதன் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.
ஜூலை 5ஆம் தேதி முதல் வங்கியின் செயல்பாடுகள் நிறுத்தப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த கூட்டுறவு வங்கியை மூடிவிட்டு ஒரு கலைப்பாளரை நியமிக்க உத்தரவிடுமாறு கர்நாடக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியின் ஒவ்வொரு டெபாசிட்டரும் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன் (Deposit Insurance and Credit Guarantee Corporation)இல் இருந்து தனது டெபாசிட்டில் ரூ.5 லட்சம் வரையிலான க்ளைம் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த கூட்டுறவு வங்கியின் டெபாசிட்தாரர்களில் சுமார் 99.96% பேர் தங்கள் வைப்புத்தொகையின் முழுத் தொகையையும் DICGC-யிடமிருந்து பெறுவதற்கு உரிமையுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கியிடம் போதிய மூலதனம் மற்றும் வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் இல்லை என்றும், அதன் செயல்பாடுகள் அதன் டெபாசிடர்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அறிக்கையின்படி, தற்போதைய நிதி நிலை காரணமாக, வங்கி அதன் வைப்பாளர்களுக்கு முழுப் பணத்தையும் செலுத்த முடியாது என்று விளக்கம் அளித்துள்ளது.