காதலனை பார்க்க ஆசையோடு சென்ற இளம்பெண்..!! திடீரென காட்டுப் பகுதிக்குள் நுழைந்த வாகனம்..!! நண்பன் செய்த மோசமான செயல்..!!
திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த 20 வயதான இளம்பெண், செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர், வாலிபரை காதலித்து வந்துள்ளார். கடந்த வாரம் அண்ணன் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது இளம் பெண்ணின் காதலன் அவருக்கு வாசனை திரவியத்தை பரிசாக கொடுத்திருக்கிறார்.
இதனை அறிந்த இளம் பெண்ணின் பெற்றோர் அவரை கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த இளம்பெண் தனது காதலனின் நண்பனான மூர்த்தியின் வீட்டிற்கு சென்று காதலனின் வீட்டில் கொண்டு விடுமாறு கேட்டுள்ளார். பின்னர், இருசக்கர வாகனத்தில் அந்த இளம்பெண்ணை ஏற்றிச் செல்லும்போது, திடீரென வேறு திசையில் வாகனத்தை திருப்பி காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு வைத்து இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் உனது குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாக மூர்த்தி மிரட்டியுள்ளார். இதனால் இளம்பெண் யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மூர்த்தி குடிபோதையில் நண்பனை தொடர்பு கொண்டு அவரது காதலியை கற்பழித்தது பற்றி உளறிவிட்டார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காதலன் இளம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது பெற்றோருடன் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், மூர்த்தியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : ”இபிஎஸ் இதை செய்தால் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்கிறேன்”..!! டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி..!!