For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”நம்ம ரெண்டு பேரும் உல்லாசமாக இருக்கலாம்”..!! வீடு புகுந்து இன்ஸ்டா காதலியிடம் பாலியல் சீண்டல்..!! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!!

The student was alone at home. Upon learning of this, Vimalraj entered the student's house.
07:42 AM Jan 02, 2025 IST | Chella
”நம்ம ரெண்டு பேரும் உல்லாசமாக இருக்கலாம்”     வீடு புகுந்து இன்ஸ்டா காதலியிடம் பாலியல் சீண்டல்     தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட கிராமத்தில் வசிக்கும் 15 வயது மாணவி ஒருவர் அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும், தேனி மாவட்டம் உத்தமபாளையம் விமல்ராஜ் (வயது 19) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறிக்கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து சம்பவத்தன்று இளைஞர் விமல்ராஜ், மாணவியை பார்ப்பதற்காக தேனியில் இருந்து திருவண்ணாமலையில் உள்ள மாணவியின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்துள்ளார். இதை தெரிந்து கொண்ட விமல்ராஜ், மாணவியின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

பின்னர், தனியாக இருந்த மாணவியிடம், நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம். இப்போது உல்லாசமாக இருக்கலாம் எனக்கூறி ஆசைவார்த்தை பேசியுள்ளார். பின்னர், திடீரென அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கத்தி கூச்சலிட்டுள்ளார்.

சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அந்த வாலிபரை மடக்கி பிடித்து பிரம்மதேசம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இளைஞர் விமல்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Read More : மாணவர்களே ரெடியா..? பள்ளிகள் மீண்டும் திறப்பு..!! இந்த மாவட்டங்களில் இன்று அரையாண்டுத் தேர்வு..!!

Tags :
Advertisement