For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

3 வேளையும் பீட்சா தான்.. 30 நாட்களில் உடல் எடையை குறைத்த அயர்லாந்து இளைஞர்!

A young man in Ireland lost weight after eating pizza for three consecutive days for 30 days.
05:32 PM Jul 03, 2024 IST | Mari Thangam
3 வேளையும் பீட்சா தான்   30 நாட்களில் உடல் எடையை குறைத்த அயர்லாந்து இளைஞர்
Advertisement

அயர்லாந்தில் 30 நாட்கள் தொடர்ந்து மூன்று வேளையும் பீட்சா சாப்பிட்டு இளைஞர் ஒருவர் தனது உடல் எடையை குறைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான துரித உணவாக பார்க்கப்படும் பீட்சா, இத்தாலி ஏழை மக்களின் உணவாக முதன் முதலில் தோன்றியது. பின்பு பொருளாதார முன்னேற்றம், நவீன தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த பின்பு, பீட்சா உலக உணவாக அவதாரம் எடுத்தது. ஆரம்பகாலத்தில் தட்டையான ரொட்டிகளில் காய்கறிகள் மற்றும் சுவையூட்டிகளை சேர்த்து, மக்கள் அதற்கு பீட்சா என பெயர் சாப்பிட்டனர்.

நாளடைவில் உணவகங்கள் பீட்சாவில் பல வெரைட்டிகளை அறிமுகம் செய்து எல்லா தரப்பினரையும் பீட்சா பக்கம் திரும்ப வைத்தன. இந்த நிலையில், பீட்சாவில் பொதுவாக அதிக கலோரிகள், கொழுப்புகள் மற்றும் சோடியம் உள்ளது, இது கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தி இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என உணவு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் 30 நாட்களில் உடல் எடையை குறைக்கும் சவாலில் ஒரு நாளைக்கு மூன்று முறை பீட்சா சாப்பிட்டு உடல் எடையைக் குறைத்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.ரயன் மெர்சர் என்ற பயிற்சியாளர் 30 நாள் எடை குறைப்பு சவாலின் போது ​​காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளை உணவையுமே பீட்சாவாக எடுத்துக் கொண்டார். இதன் படி மூன்று வேலைக்கு 10 துண்டுகள் வீதம் பீட்சாவை சாப்பிட்டு 3.5 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார்.

​​மெர்சர் இந்த எடை குறைப்பு சவாலின் போது பீட்சாவைத் தவிர அனைத்து விதமான நொறுக்குத் தீணிகளையும் கைவிட முடிவு செய்தார். கலோரி பற்றாக்குறை மற்றும் ஆரோக்கியம் இவற்றை கருத்தில் கொண்டு அனைத்து வகையான நொறுக்குத் தீணிகளையும் கைவிட்டு தனக்கு மிகவும் பிடித்த உணவான பீட்சாவை மட்டும் உட்கொண்டு வந்தார்.

இது குறித்து அவர் கூறியபோது “ உடல் எடையை குறைக்க முற்பட்டபோது அனைத்து நொறுக்குத் தீணிகளையும் கைவிட்டேன். ஆனால் எனக்கு பிடித்த பீட்சாவை மட்டும் கைவிடவில்லை. ஒரே மாதிரியான உணவாக இருக்குமே என நினைத்து புதிய புதிய வகை பீட்சாக்களை உட்கொள்ள துவங்கினேன். என்னுடைய முக்கிய நோக்கமே நமக்கு பிடித்த உணவை கைவிடாமல் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பது தான்” என அவர் தெரிவித்துள்ளார்.

Read more | அலர்ட்!! வேகமாக பரவும் ஜிகா வைரஸ்..!! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

Tags :
Advertisement